ஜொகூர் நோய்த்தொற்றின் மிக உயர்ந்த விகிதத்தைப் பதிவு செய்தது

நேற்றைய நிலவரப்படி, நாட்டின் மிக உயர்ந்த தினசரி தொற்று வீதத்தை (ஆர்.டி.) 1.18-ஆக, ஜொகூர் பதிவு செய்துள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

தனது கீச்சகத்தின் மூலம் பகிரப்பட்ட விளக்கப்படத்தின் அடிப்படையில், கோலாலம்பூர் இரண்டாவது மிக உயர்ந்த ஆர்.டி.-ஐ 1.12 ஆகவும், லாபுவான் 1.11, திரெங்கானு மற்றும் சிலாங்கூர் முறையே 1.10 ஆகவும், சரவாக் 1.03 மற்றும் பஹாங் 1.01 எனவும் பதிவு செய்தன.

மற்ற மாநிலங்களில், பேராக் 0.99, மலாக்கா 0.96, கெடா மற்றும் பினாங்கு 0.93, புத்ராஜெயா 0.90, நெகிரி செம்பிலான் மற்றும் சபா 0.89, பெர்லிஸ் 0.82 மற்றும் கிளாந்தான் 0.84 ஆகியவை ஒன்றுக்கும் கீழான பதிவுகளைக் கொண்டிருந்தன.

முழு நாட்டிற்குமான ஆர்.டி. 1.09 ஆகும், என்றார் அவர்.

  • பெர்னாமா