பொதுத் தேர்தல் (ஜி.இ) நடைபெறுவதை விரும்பவில்லை, மாறாக மக்கள் ஆணையை மீட்டெடுக்கும் நிலைப்பாட்டில் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) உள்ளது.
பி.எச். கூட்டணியின் மூன்று கட்சி செயலாளர்களும், பெரும்பாலும் தேர்தல் பிரச்சினைகளை எழுப்பும் பிரதமர் முஹைதீன் யாசினின் அறிக்கையை, ஒரு கூட்டு அறிக்கையில் மறுத்தனர்.
“இந்த நேரத்தில், மலேசியர்கள் தேர்தல்களை விரும்பவில்லை என்பது மிகவும் தெளிவாக உள்ளது, ஆனால் தொற்று மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க அரசியல் நிலைத்தன்மையை விரும்புகிறார்கள்.
“எனவே, தேர்தல்களைக் கருத்தில் கொள்ள தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் பி.எச். உள்ளது, 14-வது பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணை 2023 வரை செல்லுபடியாகும் என்பதால்.
“தேவை என்னவென்றால், உடனடி விகிதத்தில், சரியான தரப்பினரிடம் ஆணையைத் திருப்பித் தருவதுதான்,” என்று அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் பி.கே.ஆர். பொதுச்செயலாளர் சைபுதீன் நசுதியோன் இஸ்மாயில், அமானா பொதுச்செயலாளர் ஹத்தா இரம்லி மற்றும் டிஏபி தேசிய அமைப்புச் செயலாளர் லோக் சீயு ஃபோக் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசினும் முன்னாள் பி.கே.ஆர். துணைத் தலைவர் மொஹமட் அஸ்மின் அலியும் அவர்களது குழுவினருடன் பி.எச்.-இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, பி.எச். அரசாங்கம் கவிழ்ந்தது.
மார்ச் மாதத்தில், முஹைதீன் அம்னோ, பாஸ், ஜிபிஎஸ் மற்றும் சபாவிலிருந்து வந்த கட்சிகளுடன் சேர்ந்து தேசியக் கூட்டணி அரசாங்கத்தை (பிஎன்) உருவாக்கினார்.
இருப்பினும், இப்போது பி.என். அரசாங்கத்தின் நிலைப்பாடு சர்ச்சையில் உள்ளது, ஏனெனில் அது பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அவசரக்காலச் செயற்குழு என்னவாயிற்று?
இதற்கிடையில், ஜனவரி 12-ல் அறிவிக்கப்பட்ட அவசரக்கால சுயாதீனச் சிறப்பு குழு குறித்தும் பி.எச். தலைமை மன்றம் விவாதித்தது.
“பெயர்ப் பட்டியல் ஜனவரி 21-ம் தேதி அரசாங்கத்திடம் வழங்கப்பட்டது, இது இரண்டு வாரங்களுக்கு முன்பு.
“இருப்பினும், இன்று வரை நாங்கள் அக்குழுவின் செயல்பாட்டைப் பற்றி எந்தவொரு தகவலையும் பெறவில்லை.
“இது துரதிர்ஷ்டவசமானது, ஏனென்றால் தற்போதைய நிலைமையை ஆராய்ந்து, அவசரகாலப் பிரகடனத்தை நீக்குவது தொடர்பானப் பரிந்துரைகளை வழங்க இந்தக் குழு முக்கியமானது என்று எங்களிடம் கூறப்பட்டது,” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.