ரோன்95 மற்றும் ரோன்97 பெட்ரோலின் சில்லறை விலைகள் முறையே 3 சென் உயர்ந்து, லிட்டருக்கு RM1.93 மற்றும் RM2.23-ஆக அடுத்த ஒரு வாரத்திற்கு, பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 12 வரை இருக்கும்.
இதேக் காலகட்டத்தில், டீசலின் சில்லறை விலை 4 சென் உயர்ந்து, லிட்டருக்கு RM2.07 லிருந்து RM2.11 ஆக இருக்கும் என நிதியமைச்சு இன்று ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளது.
உலகக் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை தொடர்ந்து பாதுகாப்பதை உறுதி செய்ய தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.