என்.யு.டி.பி. : குழப்பத்தைத் தவிர்க்க, பி.டி.பி.ஆர். 2.0 செயல்பாட்டை ஒத்திவையுங்கள்

இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பி.டி.பி.ஆர்.) 2.0-ஐ அமல்படுத்துவதை ஒத்திவைக்குமாறு மலேசியத் தேசியக் கற்பித்தல் சேவைகள் சங்கம் (என்.யு.டி.பி.) கல்வி அமைச்சைக் கேட்டுக் கொண்டுள்ளது.

அதன் தலைவர் அமினுட்டின் அவாங், அதன் அமலாக்கம் குழப்பத்தை அதிகரிக்கும் என்றார்.

“கடந்த காலத்தில், இயங்கலையில், ஆரம்பப் பள்ளிக்கான பி.டி.பி.ஆர். நேரம் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் மட்டுமே, ஆனால் புதிய நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை. தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் எழும் சிக்கல்களைக் கற்பனை செய்துபாருங்கள்.

“பி.டி.பி.ஆர். செயற்பாட்டின் குழப்பத்தை அதிகரிக்கும் என்பதால், இந்த இரண்டாவது பதிப்பைத் தாமதமாக்க வேண்டும் என்றும் என்.யு.டி.பி. விரும்புகிறது. தற்போதுள்ள பி.டி.பி.ஆர். இயக்க முறைகளைப் பராமரிக்கவும்,” என்று மலேசியாகினியிடம் கூறினார்.

பள்ளியில் கற்பிப்பதைப் போலவே பி.டி.பி.ஆர். அட்டவணையைச் செயல்படுத்தும்படி ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்தும் மலேசியக் கல்வி அமைச்சை, முன்னாள் கல்வியமைச்சர் மஸ்லீ மாலிக் நேற்று விமர்சித்தார்.

கல்வி அமைச்சின் இக்கோரிக்கை மிகவும் நியாயமற்றது என அந்தச் சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

கோவிட் -19 தொற்றுநோயால், நாடு சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளபோது, கல்வியமைச்சு ஆசிரியர்களுக்கு அதிக சுமை அளிக்கக்கூடாது என்று தான் கருதுவதாக மஸ்லீ கூறினார்.

இதற்கிடையில், பி.டி.பி.ஆர். 2.0-ஐ செயல்படுத்துவதற்கு முன்பு, சாதன உரிமை மற்றும் இணைய அணுகல் தொடர்பான உண்மையான தரையில் கே.பி.எம் நிற்க வேண்டும் என்று என்.யு.டி.பி விரும்புகிறது.

“பி.டி.பி.ஆர் பதிப்பு இரண்டை செயல்படுத்துவதற்கு முன்பு, அதற்கு அடிப்படைத் தேவையான சாதனங்களும் இணைய அணுகலும் உள்ளனவா என்று கே.பி.எம். உணர வேண்டும் என்று என்.யு.டி.பி. விரும்புகிறது.

“தற்போது, பி.டி.பி.ஆர்.-ஐ செயல்படுத்துவதில், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் கூடுதல் சிக்கல்களையும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சுமைகளையும், பி.டி.பி.ஆர். 2.0-ஐ செய்லபடுத்துவதற்கு முன் கல்வியமைச்சு சீர்தூக்கிப் பார்க்க வேண்டுமென என்.யு.டி.பி. விரும்புகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.