இன்று 3,731 புதிய நேர்வுகள், 15 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று மதியம் 12 மணி நிலவரப்படி, 3,731 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 15 மரணங்களும் பதிவாகியுள்ளதாகச் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இன்று, 15 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன, ஆக நாட்டில் மொத்தம் 872 இறப்புகள் இதுவரை  பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், 3,369 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுவாசக் கருவியின் உதவி தேவைப்படும் 140 நோயாளிகள் உட்பட, மொத்தம் 292 நோயாளிகள் அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று லாபுவானில் புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் 1,606, ஜொகூர் 499, கோலாலம்பூர் 372, மலாக்கா 313, பினாங்கு 250, சரவாக் 219, சபா 160, நெகிரி செம்பிலான் 92, பேராக் 71, கெடா 43, பஹாங் 34, கிளாந்தான் 32, திரெங்கானு 29, புத்ராஜெயா 9, பெர்லிஸ் 2.

இன்று 7 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 4 பணியிடத் திரளைகள் ஆகும்.