2020-ஆம் ஆண்டில், மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.6 விழுக்காடு குறைந்துள்ளது, இது முந்தைய ஆண்டில் 4.3 விழுக்காடு வளர்ச்சியுடன் இருந்தது.
கடந்தாண்டின் நான்காம் காலாண்டில், முந்தையக் காலாண்டில் 2.6 விழுக்காடு இறங்கி, 3.4 விழுக்காடு குறைந்துள்ளது.
கடைசியாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு 2009-ம் ஆண்டில் (-1.5 விழுக்காடு) ஏற்பட்டது.
2020-ஆம் ஆண்டில், ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 1998-க்குப் பிறகு, இரண்டாவது பெரிய சரிவாகும் (-7.4 விழுக்காடு).
தலைமை புள்ளிவிவர வல்லுனர் டாக்டர் மொஹமட் உஸிர் மஹிடின் கூறுகையில், உள்நாட்டு வழங்கல் மற்றும் தேவை காரணிகளும் வெளிப்புறத் துறையின் செல்வாக்கும் மலேசியப் பொருளாதாரம் 2020-ஆம் ஆண்டிற்கான மூன்று காலாண்டுகளில் தொடர்ந்து எதிர்மறையான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது என்றார்.
கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையுடன் (பி.கே.பி.) அவர் இதனை இணைத்தார்.