இன்று 2,712 புதியத் தொற்றுகள், 25 இறப்புகள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 2,712 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகளையும், 25 இறப்புகளையும் மலேசிய சுகாதார அமைச்சு அறிவித்தது.

அண்மைய காலமாக இரட்டை இலக்க புள்ளிவிவரங்களில் இருந்த பேராக் (198) மற்றும் கெடா (182), இன்று மூன்று இலக்க பதிவைக் காட்டியுள்ளன.

கடந்த நான்கு நாட்களாகப், புதிய தொற்றுகள் எதனையும் பதிவு செய்யாத பெர்லிஸ், இன்று ஆறு நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது.

இன்று 5,320 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 227 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 103 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (1013), ஜொகூர் (426), கோலாலம்பூர் (212), சரவாக் (200), பேராக் (198), கெடா (182), பினாங்கு (116), சபா (114), நெகிரி செம்பிலான் (81), பஹாங் (52), கிளாந்தான் (43), மலாக்கா (38), திரெங்கானு (19), புத்ராஜெயா (7), பெர்லிஸ் (6), லாபுவான் (5).