தமிழினப்போராளி செ. அமைச்சியப்பன் இன்று (18.2.2021) மாரடைப்பால் காலமானார். சிலகாலமாக இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அன்னார் இன்று மாலை கேமரன் மலையிலுள்ள தனது இருப்பிடத்தில் காலமானார்.
தமிழர், தமிழ்மொழி, தமிழ்தேசியம் என்ற சொற்களுக்கு இலக்கணம் வகுக்கும் வகையில் உணர்வோடும் உரிமையோடும் தனது வாழ்க்கை பாதையில் பயணித்த அமைச்சு என்ற அமைச்சியப்பன் , ஒரு நிகரற்ற தமிழர் என்ற போற்றலுகுறியவர்,
மலேசியாவில் மட்டுமில்லாமல், அனைத்துலக அளவிலும் தமிழரின் அடையாளத்தை நிலைநாட்ட பல்வகை வியூக சிந்தனையுடன் செயல் பட்டவர்களில் அன்னாரும் அடங்குவர்.
ஐக்கிய நாட்டு சபையின் உரிமை சாசனத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கென்று ஒரு தாயகம் வேண்டும் என்பதிலும், தமிழர்களின் பண்பாட்டு கூறுகளின் அடிப்படையில் ஒரு சிறந்த சுயசிந்தனை கொண்ட சமூக பொருளாதார அரசியல் அமைப்பு முறையை உருவாக்க இயலும் என்பதில் ஐயப்பாடற்ற நம்பிக்கையை கொண்டிருந்தார்.
மலேசியாவில் நடைபெற்ற தமிழர்களின் உரிமை சார்ந்த போராட்டங்களில் அனைதிலும் அன்னார் கலந்து கொண்டவர் என்றால் அது மிகையாகாது. அவ்வகையில் வாழ்ந்த அன்னாரின் இழப்பு மலேசிய தம்ழர்களுக்கு மட்டுமின்றி உலக தமிழர்களுக்கும் ஒரு பெரும் இழப்பாகும்.
தொடர்புக்கு: மணிதிருமாள் (மகன்) 011-1144 5693. இறுதிச்சடங்குகள்: 20.2.2021: மணி 11.00 – 1255.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
- மலேசியாஇன்று குடும்பத்தினர்