RM500,000 தண்டம் : மலேசியாகினி பொதுமக்களின் உதவியை நாடுகிறது

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில், ஃபெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பான RM500,000 தண்டத்தைத் திரட்ட உதவுமாறு மலேசியாகினி பொதுமக்களை அணுகுகிறது.

சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகம் கோரிய RM200,000-ஐ விட அதிகமான தொகையை, அடுத்த புதன்கிழமை (பிப்ரவரி 24), மூன்று வேலை நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.

செய்தி நிறுவனத்தின் இணையதளத்தில், வாசகர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக, மலேசியாகினி மற்றும் அதன் தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கானுக்கு எதிரான அவதூறு வழக்கை ஏஜி இட்ரிஸ் ஹருன் தொடர்ந்தார்.

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான அக்கருத்துக்களை மலேசியாகினி வெளியிட்டதற்கான காரணத்தை, வழக்குரைஞர்களால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை.

மலேசியாகினி அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் – நீதித்துறை உறுப்பினர்கள் உட்பட – வாசகர்களை ஈர்த்தது என கான் சொன்னார்.

“எங்கள் நிதிக்கு மலேசியர்கள் அனைவரும் பங்களிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். விமர்சனக் கருத்துகளுக்குத் திறந்திருப்பது ஒரு வலுவான மற்றும் ஆரோக்கியமான செய்தி நிறுவனத்தின் அடையாளம்.

“21 ஆண்டுகளாக, பொதுமக்களின் தாராள மனப்பான்மையை நம்பியே மலேசியாகினி தனது பணியைத் தொடர்ந்தது. மீண்டும் நாங்கள், மலேசியர்களை எங்களுக்கு உதவுமாறு அழைக்கிறோம்,” என்று கான் கூறினார்.

மலேசியாகினியைக் காப்பாற்ற நிதி”-க்குப் பங்களிக்க விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர் :-

வங்கிக் கணக்கு பெயர்: Mkini Dotcom Sdn Bhd

வங்கிக் கணக்கு எண் : 5142 5351 6714 (Maybank)

ஸ்விஃப்ட் குறியீடு (Swift Code) : MBBEMYKL

கிளை முகவரி : Dataran Maybank, Level 1 Tower A, Dataran Maybank, 59000 Kuala Lumpur.

எங்களை +603 7770 0000 என்ற எண்ணில், அழைப்பதன் மூலம் உங்கள் கடன்பற்று அட்டையைப் பயன்படுத்தியும் நீங்கள் நன்கொடை அளிக்கலாம்.