கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 1,647 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கை நான்கு இலக்க மட்டத்தில் உள்ளது, இருப்பினும் ஒட்டுமொத்தமாக இது இன்னும் குறைந்து வரும் போக்கைக் காட்டியுள்ளது.
இன்று 2,104 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், செயலில் உள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 17,544 ஆக உள்ளது.
இதற்கிடையே, இன்று பதிவான ஒன்பது புதிய கோவிட் -19 இறப்புகளில், ஐந்து கிள்ளான் பள்ளத்தாக்கில் பதிவாகியுள்ளன. ஆக, நாட்டின் கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை 1,200 ஆக உள்ளது.
அவசரப் பிரிவில் 147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 61 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் (712), ஜொகூர் (170), பினாங்கு (169), சரவாக் (168), கோலாலம்பூர் (86), நெகிரி செம்பிலான் (79), மலாக்கா (71), பேராக் (69), சபா (61), கிளந்தான் (28), கெடா (18), பஹாங் (7), திரெங்கானு (4), புத்ராஜெயா (2), பெர்லிஸ் (2), லாபுவான் (1).
இன்று 5 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன. அவற்றுள் 3 பணியிடம் சார்ந்தவை.