வருமானத்தை இழந்த பி40 குழுவினர், ஒரு முறை RM500 ரொக்க உதவியையும், RM1,000 மற்றும் அதற்கும் குறைவான வருமானம் பெறும் மக்கள் பராமரிப்பு உதவி (பிபிஆர்) பெறுநர்கள், கூடுதலாக RM500-ஐ, வரும் ஜூன் மாதம் முதல் பெறுவார்கள்.
வருமானத்தை இழந்த 2.4 மில்லியன் பெறுநர்களுக்கு, இந்த RM1.2 பில்லியன் ஒதுக்கீட்டு உதவி, மக்களையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் மூலோபாயத் திட்டத்தின் கீழ் (பெமர்காசா) உதவுவதற்கான முயற்சிகளில் ஒன்றாகும் என்று பிரதமர் முஹைடின் யாசின் கூறினார்.
“இந்த நேரத்தில், தொற்றுநோயின் சவாலை எதிர்கொள்வதில், அரசாங்கம் மக்களின் நலனைப் பாதுகாக்கும், குறிப்பாக இன்னும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு.
“இந்த முயற்சி பாதிக்கப்படக்கூடியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வேலை இழந்தவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும்,” என்று, நேற்று தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகத் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட பெமர்காசாவின் சிறப்பு அறிவிப்பில் அவர் கூறினார்.
இரு பிரிவுகளைச் சார்ந்த பயனாளிகளும், 21 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள், அவர்கள் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய தேவையில்லை.
உள்நாட்டு வருவாய் வாரியம் (எல்.எச்.டி.என்.), தொழிலாளர் சேமநிதி நிதி (இபிஎஃப்) மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்பு (சொக்சோ) மூலம், வருமான இழப்பு சரிபார்ப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பெறுநரின் கணக்கில் உதவிகள் சேர்க்கப்படும்.
திவாலான தனிநபர்கள் தங்கள் வழக்குகளை நிர்வகிக்கும் நொடிப்புத் துறைக்கு (Jabatan Insolvensi) மின்னஞ்சல் விண்ணப்பங்கள் மூலம், அரசாங்க உதவியைப் பெற, இயங்கலையில் வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கான நெகிழ்வுத்தன்மையும் வழங்கப்படும்.
“கணக்கில் சேர்க்கப்படும் எந்தவொரு பண உதவியும், எந்த மாத தவணை விலக்கிற்கும் உட்பட்டது அல்ல,” என்று அவர் கூறினார்.
நகர்ப்புறப் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித் திட்டத்தை மேம்படுத்துவதற்காக, நாடு முழுவதும், முக்கிய நகரங்களில் உள்ள 300,000 ஏழை குடும்பத்தினருக்குப் பயனளிக்கும் வகையில் பணமில்லாக் கொள்முதல் திட்டல்
மூலம் சமையலறை பொருட்கள் வழங்கும் உதவித் திட்டத்திற்கு RM100 மில்லியன் ஒதுக்கீட்டை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
வீடற்றவர்களுக்கு உதவ, கோலாலம்பூர் மாநகர மன்றம் (டி.பி.கே.எல்), தாமான் டேசா கோலாலம்பூரில், அஞ்சோங் கெலானாவைத் தற்காலிக தங்குமிடமாக அமைத்துள்ளதாக அவர் சொன்னார்.
கோவிட் -19 தொடர்பான மைசலாம் திட்டத்தில், முஹைதீன் 70,000 அதிகமான பி40 குழுவினர் மொத்தம் RM40 மில்லியனுக்கு நன்மை அடைந்ததாக அவர் கூறினார்.
இந்தத் திட்டத்தை மேம்படுத்துவதற்காக, தொற்றின் காரணமாக வீட்டிலேயே தனிமைப்படுத்த அனுமதிக்கப்பட்ட பி40 குழுவினர், ஒரு மருத்துவ அதிகாரியின் உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டு, அதிகபட்சம் 14 நாட்களுக்கு ஒரு நாளைக்கு RM50 வருமான மாற்று கட்டணத்தின் பயனைப் பெற தகுதியுடையவர்கள்.
நடமாடும் கிளினிக் திட்ட
த்தின் சுகாதாரச் சேவைகளை நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்துவதற்காக அரசாங்கம் RM30 மில்லியனை ஒதுக்குகிறது.
சமூக நலத்துறையில், பெறுநர் சரிபார்ப்பு செயல்முறையை மேற்கொள்ள, மைஸ்டெப் (MyStep) திட்டத்தின் கீழ் 2,500 கூடுதல் அதிகாரிகளை அரசாங்கம் நியமிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கும், வணிகத்தை ஆதரிப்பதற்கும், இன்னும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் துறைகளுக்கு உதவிகள் தொடர, 20 மூலோபாய முயற்சிகளுக்கு RM20 பில்லியன் ஒதுக்கப்படுகிறது.
-பெர்னாமா