பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைவர் அன்வர் இப்ராஹிம், அம்னோ தலைவர்கள் சிலருடனான தனது சமீபத்திய சந்திப்பு குறித்து, இன்று கூட்டணி உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்.
இந்த விவகாரம் பின்னர் பி.எச்.-ஆல் விவாதிக்கப்பட்டது, ஆனால் எதிர்க்கட்சி கூட்டணி ஜிஇ15-ல் அம்னோவுடன் இணைந்து செயல்படும் என்பது பற்றிய எந்த உறுதிப்பாடும் செய்யப்படவில்லை.
பி.எச். கூட்டத்திற்குப் பிறகு, சந்திந்த அமானா துணைத் தலைவர் சலாவுதீன் அயூப் கூட்டத்தின் முடிவுகளில் திருப்தி அடைந்ததாகத் தெரிகிறது.
“(அம்னோவுடன்) சந்திப்பு வழக்கம் போல் நடைபெற்றது என்று நாங்கள் விளக்கினோம், ஆனால் ஜிஇ-யில் ஒத்துழைப்பு பற்றி எந்த உறுதிப்பாடும் இல்லை,” என்று அவர் கூறினார்.
“நாங்கள் அம்னோவுடன் விவாதித்தோம், நாங்கள் சந்தித்துகொள்ள முடியும், விவாதிக்க முடியும், ஆனால் ஜிஇ தொடர்பான முடிவுக்கு நாங்கள் இன்னும் எதையும் இறுதி செய்யவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
அம்னோ தலைவர்களுடனான சந்திப்பின் போது என்ன நடந்தது என்பது குறித்து அமானா, டிஏபி மற்றும் பி.கே.ஆர். தலைவர்களுக்கு அன்வர் விளக்கமளித்தார் என சலாவுடின் மலேசியாகினிக்கு விளக்கினார்.
அன்வர் இப்ராஹிம் முன்பு அம்னோவுடன் ஒத்துழைப்பதற்கான வாய்ப்பை நிராகரிக்கவில்லை, ஆனால் முடிவெடுப்பதற்கு மிக விரைவு என்று கூறினார்.
“பி.கே.ஆர். மற்றும் அம்னோ இடையே ஆரம்பக்கட்ட விவாதங்கள் உள்ளன,” என்று அவர் மார்ச் 16 அன்று கூறினார்.
அப்படியிருந்தும், சலாவுதீன் மற்றும் பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஜிஇ15-இல் பி.எச். – அம்னோ இடையில் ஒத்துழைப்புக்கான சாத்தியங்களை எதிர்த்தனர்.
எதிர்க்கட்சிகள் மற்ற அம்னோ தலைவர்களுடன் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நேற்று சலாவுதீன் விளக்கினார்.
“நாங்கள் இன்னும் சில அம்னோ தலைவர்களுடன் நல்ல உறவைக் கொண்டிருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.