எந்த நேரத்திலும் தாங்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக அம்னோ பெருமையுடன் கூறியுள்ள நிலையில், தேசிய முன்னணி (பி.என்.) உறுப்புக் கட்சிகள் அதிக எச்சரிக்கையுடன் காணப்படுகின்றன.
உதாரணமாக, மசீச நேரம் வரும்போது கட்சி முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளது.
மசீச தலைவர் வீ கா சியோங், முடிவெடுக்கும் போது, ஏன் அனைவரும் சேர்ந்து செய்யவில்லை என்ற கேள்வியை எழுப்பினார்.
நேற்று செய்தியாளர்கள், அமைச்சரவை பதவியை அவர் இராஜினாமா செய்வது குறித்து கேட்டபோது, போக்குவரத்து அமைச்சரான அவர், “நான் அதைச் சொல்ல வேண்டும், எந்த முடிவை எடுத்தாலும் அது ஒரு கூட்டு முடிவாக இருக்க வேண்டும்,” என்று பதிலளித்தார்.
நேற்று, அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில், தேசியக் கூட்டணியில் இருந்து அம்னோ விலகும்போது, தேசிய முன்னணியைச் சார்ந்த அனைத்து எம்.பி.க்களும் அரசாங்கப் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என ஜாஹிட் சொன்னார்.
இருப்பினும், முஹைதீன் யாசினின் அமைச்சரவையில், அம்னோ மட்டுமல்லாது தேசிய முன்னணியின் பிற உறுப்புக் கட்சிகளும் உள்ளன.
மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்ட ம.இ.கா. துணைத் தலைவர் எம்.சரவணனைத் தவிர, பி.என். அமைச்சர்களில் வீ-உம் ஒருவர்.
வீ தவிர, மேலும் நான்கு மசீச தலைவர்களும் துணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் சபா மக்கள் ஐக்கிய கட்சியின் பிரதிநிதி ஒருவரும் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.