கு லி : பி.என். அமைச்சரவையில் இருக்கும் அம்னோ அமைச்சர்களுக்கு ‘கொள்கை இல்லை’

தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்க அமைச்சரவையில் உள்ள அம்னோ தலைவர்களைக் ‘கொள்கைகள் அற்ற, இலக்கு இல்லாத’ நபர்கள் என்று அம்னோ ஆலோசனைக் குழுவின் தலைவர் தெங்கு ரஸலீ ஹம்சா விவரித்தார்.

அந்த அம்னோ மூத்தவரின் கூற்றுப்படி, அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய கட்சி அவர்களைக் கேட்டுக்கொள்ளும் போது, அவர்கள் அதனை மறுக்கின்றனர்.

“மன்னிக்கவும், அவர்களுக்குக் கொள்கைகள் இல்லை, எந்த இலக்கும் இல்லை. அவர்கள் அமைச்சர் பதவிகளை விரும்புகிறார்கள்.

“அம்னோ உறுப்பினர்கள் என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் என்னிடம் கேட்கும்போது, ​​அவர்கள் இராஜினாமா செய்து இந்த அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று நான் சொல்கிறேன்,” என்று ரஸாலீ தி மலேசிய இன்சைட்-இடம் கூறினார்.

ஜிஇ15-இல், இராஜினாமா செய்ய மறுத்த அமைச்சர்களை நியமனம் செய்வது குறித்து குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் பேசினார்.

அவரைப் பொறுத்தவரை, கட்சித் தலைமை இந்த விஷயத்தை எவ்வாறு கையாளப் போகிறது என்பது அவருக்குத் தெரியவில்லை.

அம்னோ அமைச்சர்கள் கட்சி எதிர்பார்த்த விசுவாசத்தைக் காட்டவில்லை என்பது தெரிகிறது என்றார் அவர்.

“நானாக இருந்தால், அவர்களைக் கட்சியிலிருந்து வெளியேற்றி விடுவேன், அவர்கள் திரும்பி வருவதை நான் விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.

“அவர்களுக்கு ஒரு வேலை வழங்கப்பட்டது, அவர்கள் அங்கேயே இருக்க விரும்புகிறார்கள். அவர்களில் சிலர் மற்றதை விட அமைச்சராக இருப்பது நல்லது என்று நினைக்கிறார்கள்.

“இதனால், அவர்கள் மட்டும் இழக்க மாட்டார்கள். நாங்கள் (அம்னோ) அனைவரும் ஒன்றாக விழுவோம்,” என்று அவர் மேலும் கூறினார்.