தமிழ் ஆர்வலர் சின்னத்தம்மி ஆறுமுகம் காலமானார்

நம் நாட்டின் மிகப் பெரிய தமிழ்ப்பள்ளியான சிம்பாங் லீமா பள்ளியின் வளர்ச்சிக்கு வித்திட்ட முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சின்னத்தம்பி ஆறுமுகம் இன்று காலமானார்.

இருதய அடைப்புச் சிகிச்சைக்குப் பிறகு திடமாக இருந்தவர் இன்று அதிகாலையில் மாரடைப்பால் இறந்ததாக அவரின் குடுப்பத்தினர் தெரிவித்தனர்.

ஒரு சிறந்த தமிழ் ஆர்வலரான அவர் தமிழ்மொழி, தமிழ் பண்பாடு ஆகிவற்றின் வளர்ச்சிக்கு வித்துடும் வண்ணம் பல இயக்களின் வழி தொண்டார்றியவர். சிம்பாங் லீமா பள்ளிவாரியம், மலேசிய தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு இயக்கம், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், வள்ளலார் மன்றம் வாரியம் போன்றவற்றில் பங்காற்றியவர்.

2006/2007 ஆம் ஆண்டுகளில் சிம்பாங்லீமா பள்ளியின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய அன்னார், 2,400 மாணவர்களைக் கொண்ட அப்பள்ளியின் பெற்றோர் ஆசியர் சங்கத்திற்கு ஒரு அளப்பறிய தலைமைத்துவத்தை வழங்கினார்.

அமரர் சின்னத்தம்பியின் மறைவு, ஒரு பெரும் இழப்பாகும். தமிழ்கல்வியின் மீது தீராத பற்றும் நம்பிக்கையும் கொண்டிருந்த ஓர் அற்புத மனிதர் அவர்.

அன்னாரின் பிரிவால் துயரும் மனைவி திருமதி பரமேஸ்வரி, மகன்கள் பிரேம்குமரன், கவின்குமார், சந்திரசூரியன், லோகேஸ்வரன், வேதகிரி, மகள் இந்திமதி மற்றும் குடும்பத்தினர்களுக்கு மலேசிய இன்று-ன் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னார் இறந்தும் இறவாதவர், மறைந்தும் மறையாதவர் என்ற போற்றுதலுக்குறியவர்.

அன்னாரின் இறுதிச்ச்சடங்கிகள் 11.4.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 1030 முதல் 11.30 க்குள் நடைபெரும் என்றும் அதன் பிறகு அன்னாரது நல்லுடல் மேரு இந்து இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு: வேலா 012 2257831  குணா 012 3260049.