பிஎன்பி தலைவர் பதவியை ஸெட்டி இராஜினாமா செய்கிறார்

அதன் வருடாந்திரப் பொதுக் கூட்டம் நடைபெறவிருக்கும் ஏப்ரல் 30-ஆம் தேதி, கும்புலான் பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் (பிஎன்பி) தலைவர் பதவியிலிருந்து விலகப் போவதாக ஸெட்டி அக்தார் அஸிஸ் தெரிவித்தார்.

அந்த நாளில் அவர் தனது மூன்று ஆண்டு காலத்தை நிறைவு செய்வார் என்றும், இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் முஹைதீன் யாசினுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளதாகவும், தனது பதவிக் காலத்தைப் புதுப்பிக்க எந்தத் திட்டமும் இல்லை என்று தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

இந்த வாரம், பி.என்.பி. ஊழியர்களுக்கு அவர் ஒரு மின்னஞ்சல் மூலம் இந்த விஷயத்தைத் தெரிவித்துள்ளது மலேசியாகினி -க்குத் தெரியவந்துள்ளது.

தேசிய வங்கியின் முன்னாள் ஆளுநரும், அப்போதையப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் அரசாங்க ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான ஸெட்டி, ஜூன் 30, 2018 முதல் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையில், தனது மின்னஞ்சலில், பி.என்.பி. தனது பதவிக் காலத்தில் மூன்று இலக்குகளை அடைய வேண்டும் என்று விரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது, பி.என்.பியின் முதலீட்டு இலாகாவைச் சர்வதேசச் சந்தையில் பன்முகப்படுத்தவும், ஆபத்து மற்றும் பணப்புழக்கத்தைக் கையாளும் திறனை வலுப்படுத்தவும் தான் விரும்பியதாக ஸெட்டி கூறியிருக்கிறார்.

“இந்தக் காலகட்டத்தில் மிகவும் சவாலான மற்றும் தீவிரமானச் சூழல் இருந்தபோதிலும், இந்த மூன்று அம்சங்களிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று அவர் கூறினார்.

மற்றவற்றுடன், பி.என்.பியின் அடையாளம் இப்போது மேலும் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தாலும் “குறிப்பிடத்தக்க வருமானத்தை” ஈட்ட முடிந்தது.

அப்படியிருந்தும், உருமாற்ற நிகழ்ச்சி நிரல் ஒரு முடிக்கப்படாத வணிகமாகவே இருந்தது, எனவே பல்வகைப்படுத்தல் செயல்முறை தொடரப்பட வேண்டும்.

பி.என்.பி அதன் முதலீடுகளின் தாக்கத்தைக் கவனத்தில் கொள்வதோடு, சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகக் காரணிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“நமது முதலீடுகள் வருமானம் ஈட்டப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றாலும், வருமானம் நிலையானதாக இருக்க வேண்டும் என்பதில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.