இன்று 3,120 புதிய நேர்வுகள், 23 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 3,120 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

டாக்டர் நூர் ஹிஷாம் கருத்துப்படி, கிள்ளான் பள்ளத்தாக்கு 1,083 நேர்வுகளுடன் முதன் நிலையில் உள்ளது. அதனையடுத்து சிலாங்கூரும் கோலாலம்பூரும் அதிக நேர்வுகளைப் பதிவு செய்துள்ளன.

மேலும் இன்று, சரவாக்கிலும் ஜொகூரிலும் நேர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், இன்று 23 மரணங்கள் சம்பவித்துள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் 1,574 பேர் பலியாகியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இன்று 2,334 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 338 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 181 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (675), சரவாக் (620), கோலாலம்பூர் (408), ஜொகூர் (336), கிளந்தான் (296), பினாங்கு (167), கெடா (155), பேராக் (117), நெகிரி செம்பிலான் (95), சபா (89), திரெங்கானு (53), மலாக்கா (52), பஹாங் (41), புத்ராஜெயா (11), லாபுவான் (5).