ஷாஹிர் : அம்னோ தலைவர்தான் பிரதமராக வேண்டும் என்ற அவசியமில்லை

அம்னோ தலைவர்தான் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்ற பாரம்பரியத்தைக் கட்சி இனியும் பிடித்துகொண்டு இருக்க முடியாது என்பது அம்னோ மூத்தத் தலைவர் ஷாஹிர் சமாட் கருத்து தெரிவித்தார்.

அம்னோவில், இனி ஒரு தனி மனிதன் ஆதிக்கம் செலுத்துவதையும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.

பிரதமர் வேட்பாளர் யார் என்றக் கேள்வி முக்கியமானது என்றும், அம்னோவில் இதுவரை வேட்பாளர் இல்லை என்றும் அவர் கூறினார்.

“இன்று எங்களுக்கு ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், ஓர் உதவித் தலைவர் என இருந்தாலும், எங்களிடம் பிரதமர் வேட்பாளர் குறித்த எந்த முடிவும் இல்லை. எங்களுக்குத் தெரியும், அதாவது பொதுத் தேர்தல் வரை நாங்கள் இந்த நிலைமையை எதிர்கொள்வோம்.

“அம்னோ தலைவர்தான் பிரதமராக இருக்க வேண்டும் என்ற பழைய முறைக்கு நாம் திரும்பிச் செல்லத் தேவையில்லை,” என்று அவர், இன்று தேசியப் பேராசிரியர்கள் மன்றத்தின் (எம்.பி.என்) முகநூலில் ஒளிபரப்பான பிச்சாரா தோக்கோ நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் கூறினார்.

இதற்கு முன்னர், அம்னோ ஒரு மேலாதிக்கக் கட்சியாக அறியப்பட்டது, பாரம்பரியமாக அம்னோ தலைவர் பிரதமராக இருந்தார்.

இருப்பினும், 14-வது பொதுத் தேர்தலில் (ஜி.இ) தேசிய முன்னணி தோல்வியடைந்த பின்னர், பிரதமராக இருந்த அம்னோவின் பாரம்பரியம் நிறுத்தப்பட்டது.

அந்த நேரத்தில், அம்னோவும் தேசிய முன்னணியும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தலைமையில் இருந்தது.

இதற்கிடையில், கட்சியைக் கவனித்துக்கொள்வதற்கு அம்னோவுக்கு இரண்டு திறமையான நபர்கள் இருக்க வேண்டும் என்றும், மற்றொருவர் அரசாங்கத்தை வழிநடத்த வேண்டும் என்றும் ஷாஹிர் கூறினார்.

இதற்கிடையில், அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கங்களை அமைப்பதற்கான ஒரு புதிய அணியை உருவாக்கும் திறன் அம்னோவுக்கு உண்டு என்றும் ஷாஹிர் கூறினார்.

“நான் பார்த்த வரையில், கட்சிக்கு ஏற்கனவே சில துறைகளின் செய்தித் தொடர்பாளர்கள் உள்ளனர், மேலும் வெளிநாட்டு தூதர்களின் வருகைகளைப் பெறத் தொடங்கியுள்ளனர்… இது நாட்டின் வரலாற்றிலும், அம்னோவிலும் நிகழ்ந்திராத ஒரு சிறப்பு வழக்கு .

“எனவே, இந்தப் புதிய அணிகளில் காலடி எடுத்து வைக்க, நமக்கு தைரியம் இருக்கிறதா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அம்னோவிற்கும் டிஏபிக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து கருத்து தெரிவித்த ஷாஹிர், இந்த விஷயம் நடக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.

மதச்சார்பற்ற டிஏபியுடன் ஒப்பிடும்போது, அம்னோ ஒரு பழமைவாதக் கட்சி என்றும், இந்த மோதல் இரு கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

“அம்னோ பழமைவாதமானது, டிஏபி மதச்சார்பற்றது மற்றும் பழமைவாதமானது அல்ல, எனவே, அரசியல் தத்துவத்தைப் பொறுத்தவரையில், மோதல் விமர்சகர்களுக்கும் மதச்சார்பற்றவர்களுக்கும் இடையிலானது, பழமைவாதக் குழுக்களும் மதச்சார்பற்ற குழுக்களும் எவ்வாறு ஒரே கூரையின் கீழ் அமர முடியும்.

“அதனால்தான், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) பிரிந்துவிட்டது. பழமைவாதிகள் இந்த முன்னாள் அம்னோவிலிருந்து வந்தப் பழங்குடியினர் (பெர்சத்து) பழமைவாதிகள் மற்றும் மதச்சார்பற்ற பி.கே.ஆர், டிஏபி உடன் ஒன்றாக உட்கார முடியாது.

“பாஸ் டிஏபி-யுடன் இருக்கும்போது, பக்காத்தான் ரக்யாட்டிற்கும் இதே நிலைதான்… ஒரு பழமைவாதக் கட்சியான பாஸ், மதச்சார்பற்ற டிஏபி-யுடன்ப்ஒன்றாக உட்கார விரும்புவது நடக்காது,” என்று அவர் கூறினார்.