மே 13-ல் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ஹரி ராயா ஐடில்ஃபிட்ரி பெருநாள் உபசரிப்புகள், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) பகுதிகளில் முதல் நாள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறுகையில், விருந்தினர்களின் மொத்த வருகை ஒரு நேரத்தில் 15 பேருக்கு மேல் இல்லை, சமூக இடைவெளி வீட்டின் அளவுக்கேற்ப இருத்தல் வேண்டும் என்றார்.
நிபந்தனைக்குட்பட்ட பி.கே.பி. மற்றும் மீட்புநிலை பி.கே.பி. பகுதிகளைப் பொறுத்தவரை, 1 முதல் 3 நாட்கள் வரையில் கொண்டாட்ட நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன என, நேற்று புத்ராஜெயாவில் பி.கே.பி. வளர்ச்சி குறித்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
இருப்பினும், பி.கே.பி. இறுக்கமாக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், வெளியிலிருந்து விருந்தினர்கள் வருகையைப் பெற அனுமதிக்கப்படவில்லை என்றும், அவர்கள் வீட்டிலுள்ள குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் என மட்டுப்படுத்தப்பட்டவர்கள் என்றும் இஸ்மாயில் சப்ரி கூறினார்.
கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த, உடல் வெப்பநிலையை அறிய வெப்பமானிகளை வழங்கவும், மைசெஜாத்திரா கியூஆர் ஸ்கேன்களைப் பயன்படுத்தவும் அல்லது விருந்தினர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களைப் பதிவு செய்ய புத்தகங்களைத் தயார் செய்யவும் வீட்டு உரிமையாளர்கள் ஊக்குவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இது தவிர, அனைத்து பி.கே.பி, பி.கே.பி.பி, பி.கே.பி.டி மற்றும் பி.கே.பி.பி. பகுதிகளிலும் ஹரி ராயா நிகழ்ச்சிகள் அல்லது திறந்த இல்ல உபசரிப்புகள் ஏற்பாடு செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றார் அவர்.
இதற்கிடையில், அனுமதிக்கக்கூடிய அவசரநிலை காரணிகளைத் தவிர, குறிப்பாக இந்தப் பண்டிகை காலங்களில், எந்தவொரு நபருக்கும் மாநிலத்தைக் கடக்க எந்தவிதமான விலக்கும் வழங்கப்படவில்லை என்று இஸ்மாயில் சப்ரி மீண்டும் வலியுறுத்தினார்.
இறப்பு அல்லது இறந்தவரின் குடும்ப உறுப்பினரைப் பார்ப்பது, வேலை விவகாரங்கள் மற்றும் நீண்டகாலமாக வாழ்க்கைத் துணைவர்களைச் சந்திக்காதவர்கள் போன்ற அவசரக் காரணிகளுக்கு மட்டுமே மாநில எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படுகிறது என்று அவர் வலியுறுத்தினார்.
“மாநில எல்லைகளைக் கடக்கும் தடையை மீறும் எவரையும் தடுத்து வைக்கும் அதிகாரம் சாலைத் தடுப்புகளில் ஈடுபட்டுள்ள காவல்துறைக்கு வழங்கப்படுகிறது… மாநில எல்லைகளைக் கடக்கும் அனுமதி கடிதம் தவிர, வேறு எந்த விலக்கும் வழங்கப்படவில்லை என்று நான் நம்புகிறேன்.
“சில நேரங்களில் மாநில எல்லைகளைக் கடக்கும் தகவல்களின் செல்லுபடி பிரச்சினை அல்லது காரணங்களால் அவற்றின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படாமல் போவதாக என்னிடம் கூறப்படுகிறது,” என்று கூறிய அவர், ஒவ்வொரு வார இறுதியிலும், மாநில எல்லைகளைக் கடக்க காவல்துறையினருக்கு 40,000 விண்ணப்பங்கள் வருவதாகக் கூறினார்.