ஈப்போ இராஜா பெர்மாய்சுரி பைனுன் மருத்துவமனையின் நிலைமை, கோவிட் -19 நேர்வுகள் அதிகரித்ததன் காரணமாக ஆபத்தான நிலையில் உள்ளது என்று பரவிவரும் செய்திகள் உண்மையல்ல.
அம்மருத்துவமனையின் இயக்குநர், டாக்டர் அப்துல் மாலேக் ஒஸ்மான், அச்செய்தி தவறானது, மருத்துவமனையின் தற்போதைய நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது, சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் சீராக இயங்குகின்றன என்றார்.
“மக்கள் மத்தியில் கவலை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது, எந்தவொரு அங்கீகரிக்கப்படாத செய்திகளையும் தகவல்களையும் பரப்ப வேண்டாம் என்று அனைவருக்கும் நினைவூட்டப்படுகிறது,” என்று அவர் நேற்று இரவு ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
புலனம் வழி பகிரப்பட்ட அச்செய்தி குறித்து கருத்துத் தெரிவிக்கையில், கோவிட் -19 மூன்று முதல் ஐந்தாம் நிலை நேர்மறை நோயாளிகளுக்கு இடமளிக்க மருத்துவமனை வார்டுகளில் சிக்கல் உள்ளது, இதய நோயாளிகளுக்கான வார்டுகளும் நிரம்பியுள்ளன என்றார்.
பி.கே.பி. நேற்று முதல் ஜூன் 7 வரை அமல்படுத்தப்படும்போது, எஸ்.ஓ.பி.க்களை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பொது இடங்களுக்குச் செல்வதைக் குறைக்க வேண்டும் என்றும் டாக்டர் அப்துல் மாலெக் அறிவுறுத்தினார்.
தவிர, பொது இடங்களுக்குச் செல்லும் போதெல்லாம், தொற்றுநோய் பரவாமல் தடுக்க, முகக்கவரிகள் மற்றும் கிருமிநாசினி திரவங்களைப் பயன்படுத்துவது எப்போதும் நடைமுறையில் இருக்க வேண்டும் என்றார் அவர்.
- பெர்னாமா
Testing