இஸ்ரேல் மீது ஐ.நா. தீர்க்கமாகச் செயல்பட வேண்டும் – மலேசியா

1949-ஆம் ஆண்டு, நான்காவது ஜெனீவா உடன்படிக்கையை மீறும் போர்க்குற்றமாக இருக்கும், பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலிய அட்டூழியங்களை உடனடியாக நிறுத்த முடியாத ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் இயலாமைக்கு மலேசியா கவலையும் ஏமாற்றமும் தெரிவிக்கிறது.

அது மட்டுமல்லாமல், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலிய தாக்குதல், சர்வதேசச் சட்டம், மனித உரிமை சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்திற்கு எதிரானது.

அமெரிக்காவின் எதிர்ப்பால் 119 பாலஸ்தீனியர்களைக் கொல்லப்பட்டதோடு, நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். ஆனால், பாலஸ்தீனத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஐ.நா. பாதுகாப்புக் குழு இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.

“பாலஸ்தீனிய மக்கள் மீதான இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்துமாறு கட்டாயப்படுத்த, உடனடியாகச் செயல்படுமாறு சர்வதேச சமூகத்திற்கு, குறிப்பாக ஐ.நா. பாதுகாப்புக் குழுவிற்கு மலேசியா தொடர்ந்து அழைப்பு விடுக்கும்,” என்று, இன்று பெர்னாமா தொலைக்காட்சி ஒளிபரப்பிய பாலஸ்தீனப் பிரச்சினை குறித்த சிறப்பு செய்தியில் அவர் கூறினார்.

இஸ்ரேலிய இராணுவத்தின் கொடூரச் செயல்கள், குறிப்பாக குண்டுவெடிப்பு, ஷெல் மற்றும் சொத்துக்களை அழிக்கும் நடவடிக்கைகளை, உலகத்தார் கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று முஹைடின் வலியுறுத்தினார்.

  • பெர்னாமா