மலேசியா செர்டாங் வேளாண் எக்ஸ்போ பூங்காவில் (மேப்ஸ்) உள்ள கோவிட் -19 தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை மையத்தின் (பி.கே.ஆர்.சி.) நிலைமை, 3-வது வகை கோவிட் -19 நோயாளிகளை அதிகமாக அனுமதிப்பதனால் பெருகிய முறையில் சவாலாக மாறியுள்ளது.
ஆரம்பத்தில் பி.கே.ஆர்.சி. மேப்ஸில் ஜனவரி 3-ஆம் தேதி, வகை 3 நோயாளிகளுக்கு 60 படுக்கைகள் மட்டுமே இருந்தன, ஆனால் இப்போது பி.கே.ஆர்.சி. ஒருங்கிணைந்த மேப்ஸ், அவ்வகை நோயாளிகளுக்கு 757 இடங்களை அளிக்கிறது என்று சிலாங்கூர் மாநிலச் சுகாதாரத் துறை (ஜெ.கே.என்.எஸ்.) தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக, கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கையில் சமீபத்திய அதிகரிப்புக்கு ஏற்ப, கிள்ளான் பள்ளத்தாக்கின் சுகாதார அமைப்பை ஆதரிக்கும் வகையில், 1,000 படுக்கைகளாகத் தங்கள் திறனை அதிகரிக்க ஜே.கே.என்.எஸ். திட்டமிட்டுள்ளது.
“எனவே, வகை 3 நோயாளிகள் தற்காலிக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அருகிலுள்ள அரங்குகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், இதனால் மாற்றமில்லா வகை 1 & 2 நோயாளிகள் டி.ஜி. மண்டபத்தில் தங்க வைக்கப்படுகிறார்கள்.
“இருப்பினும், இந்த மண்டபத்தில் குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாத நோயாளிகளின் வகைகளைப் பிரிக்க பி.கே.ஆர்.சி. தனது சிறந்த முயற்சியை மேற்கொள்கிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கோவிட் -19 வகை 1 மற்றும் 2 நோயாளிகள், அறிகுறியற்ற அல்லது சிறு அறிகுறிகளைக் கொண்டிருக்கும் நோயாளிகள், அதே நேரத்தில் வகை 3 மிதமான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள்.
பி.கே.ஆர்.சி. மேப்ஸ் ஆரம்பத்தில் குறைந்த ஆபத்துள்ள வகை 1 மற்றும் 2 நோயாளிகளுக்கு மட்டுமே இடமளிக்கும் நோக்கம் கொண்டிருந்தது, ஆனால் தினசரி கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வகை 3 நோயாளிகளுக்கும் அது விரிவுபடுத்தப்பட்டது.