தனியார் மருத்துவமனைகள் : நெரிசலைக் குறைக்க கோவிட்-19 அல்லாத நோயாளிகளை எங்களிடம் அனுப்புங்கள்

கோவிட்-19 தொற்று அல்லாத நோயாளிகளைத், தனியார் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்குமாறு மலேசியத் தனியார் மருத்துவமனை சங்கம், அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களைக் கேட்டுக்கொள்கிறது.

அதன் தலைவர் டாக்டர் குல்ஜித் சிங், சுகாதார அமைச்சின் இரண்டு சுற்றறிக்கைகளின் அடிப்படையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று கடந்த ஆண்டு மற்றும் சமீபத்தியப் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு என்றும் கூறினார்.

“இந்தச் சுற்றறிக்கை கடுமையான குறிப்புகளின் அடிப்படையில், அரசாங்கத்தின் அனைத்து குறிப்புக் கொள்கைகள் மற்றும் கட்டணத் திட்டங்களையும் உள்ளடக்கியது.

“அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகளுக்குத் தாமதமின்றி இந்தப் பரிந்துரையை செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக அரசு மருத்துவமனைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நடைமுறைகளை ஒத்திவைத்தல் விரிவாக செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

“அரசு மருத்துவமனைகள் இப்போது கோவிட் -19 நோயாளிகளுக்கு அதிக எண்ணிக்கையில் சிகிச்சையளிக்க வேண்டியுள்ளது,” என்ற அவர், கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் 31 தனியார் மருத்துவமனைகளும்கூட வளங்களின் அடிப்படையில் ஒத்தவை.

இப்பரிந்துரை, அரசு மருத்துவமனைகள் கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதில் பிரத்தியேகமாக கவனம் செலுத்த அனுமதிக்கும் வேளையில், தனியார் மருத்துவமனைகள் மற்ற நோயாளிகளுக்கு உதவக்கூடும் என்றும் குல்ஜித் கூறினார்.

“தனியார் மருத்துவமனைகளில், கோவிட்-19 தொற்று அல்லாத நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்குச் சுற்றறிக்கைகளின் அடிப்படையில் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும், ஆனால் அந்நோயாளிகளை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களால் மட்டுமே நோயின் அடிப்படையில் தனியார் நோயாளிகளுக்கு அனுப்ப முடியும்,” என்று அவர் கூறினார்.