நஜிப் ரசாக்கின் வழக்கறிஞர் முஹம்மது ஷஃபி அப்துல்லாவிடமிருந்து, RM9.41 மில்லியன் வரி நிலுவைத் தொகையை வசூலிக்க உள்நாட்டு வருவாய் வாரியம் (எல்.எச்.டி.என்.) நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில், எல்.எச்.டி.என். இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக ஷஃபியின் வழக்கறிஞர் முஹம்மது ஃபர்ஹான் முஹம்மது ஷாஃபி இன்று உறுதிப்படுத்தினார்.
கடந்த வாரம், இ-ஃபைலிங் முறையில் இந்த வழக்கு பட்டியலிடப்பட்டதாகவும் ஃபர்ஹான் கூறினார்.
“ஆனால், அவர் (ஷாஃபி) சம்மன் மற்றும் எஸ்ஓசி-ஐ (வரி சம்மன் கூற்று அறிக்கை) இன்னும் பெறவில்லை,” என்று அவர் இன்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது கூறினார்.
இந்த விஷயத்தில் மலேசியாகினி ஷாஃபியிடமிருந்து பதிலைப் பெற முயற்சிக்கிறது.
வரி நிலுவைத் தொகையைத் தவிர, 1எம்.டி.பி. வழக்கு விசாரணையில், நஜிப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஷாஃபி, முன்னாள் பிரதமரிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் RM9.5 மில்லியன் பண மோசடி குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார்.
செப்டம்பர் 2018-ல், ஷாஃபி மீது இரண்டு பண மோசடி மற்றும் RM9.5 மில்லியன் பணத்துடன் இணைக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.