ஜூன் 21 முதல், இடமாற்றம் செய்ய பட்டியலிடப்பட்டுள்ள அரச மலேசியக் காவல்துறையின் 12 மூத்த அதிகாரிகளில் கெடா சிறப்பு புலனாய்வு மற்றும் செயல்பாட்டுக் கிளையின் துணைத் தலைவர் ஏ.சி.பி. அப்துல் கஃபர் இப்ராஹிமும் அடங்குவார்.
அப்துல் கஃபர் பஹாங் சிறப்பு மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு கிளை துணைத் தலைவராக நியமிக்கப்படுவார் என்றும், அவரது பதவிக்குக் கெடா சிறப்பு மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு கிளை துணைத் தலைவர் ஏ.சி.பி. ஸைமி மொஹமட் நவி நியமிக்கப்படுவார் என்றும் தேசிய காவல்துறைத் தலைவரின் புக்கிட் அமான் செயலகக் கண்காணிப்பாளர் (பெருநிறுவன தொடர்பு) ஸ்கந்தகுரு ஆனந்தன், ஓர் அறிக்கையில் கூறினார்.
அந்த அறிக்கையின்படி, ஸைமியின் பதவியைப் புக்கிட் அமான் சிறப்பு கிளை இ1சி1 அதிகாரி ஏசிபி அஸிஸோன் ஓத்மான் வகிப்பார்.
“கோம்பாக் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி. அரிஃபாய் தாராவே, புக்கிட் அமான் நேர்மை மற்றும் தரநிலை இணக்கத் துறையின், தரநிலைகள் இணக்கப் பிரிவு (விசாரணை / சட்ட / வழக்கு ஆய்வு) உதவி இயக்குநராக நியமிக்கப்படுவார்; அவரது இடத்தை புக்கிட் அமான் மேலாண்மைத் துறையின் (தணிக்கை) உதவி இயக்குநர் ஏ.சி.பி. மொஹட் சுகைரி அப்துல் சபே நிரப்புவார்,” என்றும் அவர் சொன்னார்.
- பெர்னாமா