மொஹமட் அமர் : முழு பி.கே.பி. தேவைப்பட்டால் கிளந்தான் ஒப்புக்கொள்ளும்

கோவிட் -19 தொற்றுநோய் பரவலைத் தடுக்க, முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி) செயல்படுத்த வேண்டியது அவசியம் என்றால் கிளந்தான் மாநில அரசு அதற்கு ஒப்புக்கொள்ளும் என்று துணை மந்திரி பெசார் மொஹமட் அமர் நிக் அப்துல்லா கூறினார்.

“தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் (எம்.கே.என்.) எந்தவொரு முடிவையும் கிளந்தான் அரசாங்கம் எப்போதும் ஏற்றுக்கொள்ளும். நாம் இன்னும் அவசரக் காலங்களில் இருப்பதால், தற்போது மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.

கிளந்தான் மாநிலச் சுகாதாரத் துறை (ஜே.கே.என்.கே.) மேற்கொண்ட கூட்டு கலந்துரையாடலுக்குப் பின்னர், மாநில அரசின் எந்தவொரு கருத்துகளும் பரிந்துரைகளும் எம்.கே.என்.னுக்குப் பரிந்துரைக்கப்படும்,” என்று கோத்தா பருவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

கிளந்தானில் பி.கே.பி. கடந்த ஏப்ரல் 16 முதல் தொடங்கியது.

இதற்கிடையில், பாலஸ்தீனியர்களுக்கு உதவ, தனக்கு விருப்பமான மூன்று கிரிஸ்களை ஏலம் விட மொஹமட் அமர் எடுத்த முயற்சிக்கு RM42,500 நிதி கிடைத்துள்ளது அவர் கூறினார்.

  • பெர்னாமா