1எம்டிபி-உடன் தொடர்புடையது என்று கூறப்படும், பறிமுதல் செய்யப்பட்ட RM114 மில்லியன், அரசு நிதியில் இருந்து பண மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்பதை நிரூபிக்க அரசு தரப்பு தவறியதைத் தொடர்ந்து, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அவ்வழக்கை இன்று தள்ளுபடி செய்தது.
இந்த நிதி, 2018-ஆம் ஆண்டில், ஓப்யு ஹோல்டிங்ஸ் சென். பெர்ஹாட்டுக்குச் சொந்தமான, கோலாலம்பூர் பெவிலியன் ரெசிடென்ஸில் உள்ள ஒரு கொண்டோமினியத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட RM680 மில்லியன் ரொக்கம், நகைகள் மற்றும் பிற சொத்துக்களின் ஒரு பகுதியாகும்.
1எம்டிபி தொடர்பான இந்த இழப்பு வழக்கில் ஒபியு மட்டுமே பிரதிவாதி. இருப்பினும், அம்னோ மற்றும் அதன் முன்னாள் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் ஆகியோர் RM114 மில்லியனைத் திருப்பித் தரக் கோரும் மூன்றாம் தரப்பினர், இது தற்போது தேசிய வங்கியின் காவலில் உள்ளது.
இன்றைய நீதிமன்ற வழக்கு RM114 மில்லியனுடன் மட்டுமே தொடர்புடையது, கைப்பற்றப்பட்ட RM680 மில்லியன் சொத்துக்களின் மொத்த இருப்பு அல்ல, அவை இன்னும் மேல் விசாரணைக்காகக் காத்திருக்கின்றன.
நீதிபதி முஹம்மது ஜமீல் உசின் தனது வாய்வழி முடிவில், RM114 மில்லியனை திருப்பித் தர வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்த முடிவுக்கு வரவில்லை.