கோவிட் – 19 | சுகாதார அமைச்சு இன்று 6,806 கோவிட் -19 புதிய நேர்வுகளை அறிவித்துள்ளது, ஆக இதுவரை நாட்டில் மொத்த நேர்வுகளின் எண்ணிக்கை 492,302 ஆக உள்ளது.
தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக, புதிய நேர்வுகளின் எண்ணிக்கை 6,000-ஐ தாண்டி பதிவாகியுள்ளது.
அந்த எண்ணிக்கையில், கிள்ளான் பள்ளத்தாக்கில் மொத்தம் 2,967 புதிய நேர்வுகள் (43 விழுக்காடு) பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், இன்று 59 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இது நாட்டில் பதிவான ஆக அதிக மரண எண்ணிக்கையாகும். இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 2,099 பேர் பலியாகியுள்ளனர்.
அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் இன்று ஜொகூரில் பதிவானது (14). அதனைத் தொடர்ந்து, சிலாங்கூர் (10), கோலாலம்பூர் (8), கிளந்தான் (6), நெகிரி செம்பிலான் (4), மலாக்கா (4), கெடா (3), பேராக் (3), திரெங்கானு (3), சரவாக் (2), சபா (1), பினாங்கு (1) என மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இன்று 3,916 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 587 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 330 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் – 2,277, கோலாலம்பூர் – 655, ஜொகூர் – 615, சரவாக் – 608, கிளந்தான் – 426, கெடா – 417, பினாங்கு – 362, நெகிரி செம்பிலான் – 291, பேராக் – 248, சபா – 245, திரெங்கானு – 233, மலாக்கா – 212, பஹாங் – 157, P புத்ராஜெயா – 35, லாபுவான் – 17, பெர்லிஸ் – 8.
மேலும் இன்று, 24 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, நாட்டில் பதிவான ஆக அதிகத் தினசரி புதியத் திரளைகள் எண்ணிக்கை இதுவாகும்.
ஜொகூர் பாருவில், ஜாலான் தஞ்சோங் குப்பாங் கட்டுமானத் தளம் ஒன்றில் மிகவும் மோசமான செயற்பாட்டில் உள்ள திரளை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது, பதிவான புதிய திரளைகளில் மூன்று இலக்க புதிய நேர்வுகளைக் கொண்ட ஒரே திரளை இதுதான்.
இன்று வகைப்படுத்தப்பட்ட 24 புதியத் திரளைகளில், ஆறு “மத அடிப்படையிலான நிகழ்ச்சிகளுடன்” தொடர்புடையவை, ஒன்பது “பணியிடங்கள்” சார்ந்தவை ஆகும்.