நேற்று, கோம்பாக் காவல் நிலையத்தில், போலிஸ் காவலில் இருந்தபோது இறந்த எஸ் சிவபாலன் என்ற பாதுகாவலரின் பிரேதப் பரிசோதனையில், அவர் மாரடைப்பால் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று சிலாங்கூர் போலீசார் தெரிவித்தனர்.
சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் அர்ஜுனைடி முகமது ஓர் அறிக்கையில், கோம்பாக் போலிசாரால் கைது செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் இறந்த 43 வயதுடைய நபரின் பிரேதப் பரிசோதனை இன்று காலை கோலாலம்பூர் மருத்துவமனையில் செய்யப்பட்டது.
“இறந்தவர் உடலின் பிரேதப் பரிசோதனை, அவரின் வாரிசுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் செய்யப்பட்டது.
“பிரேதப் பரிசோதனையின் முடிவுகளில், உடலில் காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
“இறந்தவரின் குடும்பத்தினருக்கும், மருத்துவமனையின் மூலம் இறப்புக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
இந்த வழக்கு திடீர் மரணம் (Sudden Death Report – எஸ்.டி.ஆர்.) என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அர்ஜுனைடி கூறினார்.
“நிறைவு செய்யப்பட்ட விசாரணை அறிக்கை, இந்த மரணம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை நடத்துவதற்கான முன்மொழிவுடன் துணை அரசு வழக்கறிஞருக்குச் சமர்ப்பிக்கப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.
கைது செய்து, கோம்பாக் போலிஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு, அந்த நபருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாக ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன.
காவல்துறையினரின் அழைப்பின் பேரில், செலாயாங் மருத்துவமனை துணை மருத்துவர்கள் ஆம்புலன்ஸில் வந்து அவசரச் சிகிச்சை அளித்துள்ளனர்.
எவ்வாறாயினும், அந்த நபர் இறந்துவிட்டார் என அறிவிக்கப்பட்டதாக கோம்பாக் காவல்துறை தலைவர் அரிஃபாய் தாராவே தெரிவித்தார்.


























இன்னொரு தமிழன் உயிர் இழந்தான். உண்மையில் சிவபாலன் மாரடைப்பால் உயிர் இழந்திருந்தால் கூட இதனை நம்புவதற்க்க்கு கடினமாக இருக்கிறது.