கோவிட் -19 சினோவாக் தடுப்பூசியை, மாநிலத்திற்கு வழங்கியதாகக் கூறப்படும் நபர்கள் மீதான விசாரணைக்கு உதவ, பல தரப்பினரின் சாட்சியங்களைப் பினாங்கு போலீசார் பதிவு செய்வார்கள்.
பினாங்கு காவல்துறைத் தலைவர் சஹாபுதீன் அப்துல் மனான், பினாங்கு முதலமைச்சர் அலுவலகம் உட்பட அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பலரிடமிருந்து இதுவரை ஆறு போலிஸ் புகார்களைப் பெற்றதாகக் கூறினார்.
“கடந்த மே 19-ம் தேதி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடினின் பினாங்கு முதல்வருக்குத் தடுப்பூசி நன்கொடை வழங்கப்பட்டது என்பது ஒரு பொய் தகவல் என்று கூறிய அறிக்கை தொடர்பாக ஒரு போலீஸ் புகாரைப் பினாங்கு அரச மலேசியக் காவற்படை (பி.டி.ஆர்.எம்.) பெற்றது.
“போலிஸ் அறிக்கையைத் தொடர்ந்து, பினாங்கு வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை, தண்டனைச் சட்டத்தின் 420 மற்றும் 511 பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விசாரணை இன்னும் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது என்றும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்ட அலுவலகம் மற்றும் பினாங்கு முதலமைச்சர் அலுவலகம் ஆகியவற்றின் சாட்சிகளின் உரையாடல்களைப் பதிவு செய்வது உட்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஆரம்ப விசாரணையில் 2 மில்லியன் டோஸ் சினோவாக் தடுப்பூசியை வழங்கியவர், ஸிண்டாய் டெவலப்மென்ட் எண்டர்பிரைஸ் லிமிடெட் நிறுவனத்தின் வாய்மொழியாக நியமிக்கப்பட்ட பிரதிநிதி மட்டுமே என்றும், கடிதத்தில் கூறப்பட்டுள்ளபடி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அல்ல என்றும் அவர் கூறினார்.
நிறுவனத்தின் பதிவு நிலை மற்றும் கடிதத்தை எழுதியவர் பங்கை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனத்தைத் தனது தரப்பு தொடர்புகொள்ளும் என்றும் சஹாபுதீன் கூறினார்.
“இந்த வழக்கின் செயல்முறையானது, ஸிண்டாய் டெவலப்மென்ட் எண்டர்பிரைஸ் லிமிடெட் பிரதிநிதியாக இருக்கும் ஒரு நபர், பினாங்கு மாநில அரசாங்கத்தை 2 மில்லியன் டோஸ் சினோவாக் தடுப்பூசியை வழங்குவதன் மூலம் ஏமாற்ற முயற்சிப்பதாக நம்பப்படுகிறது, இது இல்லாத ஒன்று என்று நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார் கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, கடிதத்தை எழுதியவர் பினாங்கு முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பிய கடிதத்தின் கையொப்பம் தன்னுடையது என்பதையும் உறுதிப்படுத்தினார்.
“அனைத்து விசாரணை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்ட பின்னர், போலிசார் விசாரணையை நடத்தி, விசாரணையின் ஆய்வு அறிக்கையைப் பினாங்கு மாநில வழக்குரைஞர் அலுவலகத்திற்கு ஆலோசனை மற்றும் பார்வைகளுக்காக அனுப்புவார்கள்,” என்று அவர் கூறினார்.
- பெர்னாமா