இன்று 6,976  புதிய நேர்வுகள், இவ்வாரத்தில் மொத்தம் 346 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 6,976 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்பு (மே 20) முந்தைய 6,806 நேர்வுகளை விட இது மிக உயர்ந்த தினசரி புதிய பதிவாகும்.

புதிய நேர்வுகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக, ஐந்தாவது நாளாக 6,000-ஐத் தாண்டியுள்ளது.

சிலாங்கூர் 2,235 நேர்வுகளுடன், அதிக எண்ணிக்கையிலான புதிய நேர்வுகளைக் கொண்ட மாநிலமாக உள்ளது.

இதற்கிடையில், இன்று 49 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களுள் ஒருவர் வெளிநாட்டுக்காரர். இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 2,248 பேர் பலியாகியுள்ளனர்.

புதிய இறப்புகள் சிலாங்கூர் (14), ஜொகூர் (8), பினாங்கு (6), மலாக்கா (6), கெடா (4), சரவாக் (3), நெகிரி செம்பிலான் (2), கோலாலம்பூர் (2), சபா ( 2), கிளந்தான் (1) மற்றும் பெர்லிஸ் (1) எனப் பதிவாகியுள்ளன.

இன்று 3,587 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 681 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 361 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் – 2,235, சரவாக் – 663, கிளந்தான் – 626, ஜொகூர் – 549, கோலாலம்பூர் – 447, நெகிரி செம்பிலான் – 434, கெடா – 422, பினாங்கு – 372, பேராக் – 279, திரெங்கானு – 266, பஹாங் – 263, மலாக்கா – 209, சபா – 136, லாபுவான் – 37, புத்ராஜெயா – 30, பெர்லிஸ் – 8.

மேலும் இன்று, 24 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 9 பணியிடத் திரளைகள், 8 சமூகத் திரளைகள், 6 மத நிகழ்ச்சிகள் தொடர்பானவையும் அடங்கும்.