கோவிட் -19 தொற்றைச் சமாளிக்க, சுகாதார வசதிகளை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அரசாங்கத்தால் அதனைக் கடுமையாக செய்ய முடியவில்லை.

அதனால்தான், பிரதமர் முஹைதீன் யாசின் பரிந்துரைக்கப்பட்ட செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) இணங்குவதன் மூலம் தங்களைக் கவனித்துக் கொள்ளுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
தான் பொது மக்களின் கோபத்திற்கு இலக்காகபோவதை அறிந்திருந்தாலும், முஹைதீன் இந்த முறையீட்டைச் செய்தார்.
மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும் தீவிரச் சிகிச்சைப் பிரிவு (ஐ.சி.யூ) படுக்கைகள் போதவில்லை எனப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் போது, அவற்றை நிர்வகிக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது என்று முஹைதீன் கூறினார்.
அவற்றுள் சில, தனியார் மருத்துவமனைகளைப் பயன்படுத்துவதோடு, சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தன்னார்வச் சேவைகளைப் பயன்படுத்துவதும் அடங்கும்.
“ஆனால், பல்லாயிரக்கணக்கான படுக்கைகளை ஏற்பாடு செய்வது அர்த்தமல்ல (மக்கள் தங்களைக் கவனித்துக் கொள்ளாவிட்டால்).
“இது 20,000 (நேர்வுகள்) வரை சென்றால், அதை நாம் எந்த அளவுக்கு சமாளிக்க முடியும்? நம்மால் அதைச் செய்ய முடியாது, வளர்ந்த நாடுகளால் கூட அதைச் செய்ய முடியாது.
“நான்கு முதல் ஐந்து நாட்களில், சீனாவால் ஒரு மருத்துவமனையை உருவாக்க முடியும், ஆனால் நம்மால் அதைச் செய்ய முடியாது (அந்த வழியில்).
“எனவே, நாம் மக்களின் உதவியைதான் கேட்க வேண்டும், நமக்கு நாமே உதவ வேண்டும். உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். நாம் நோய்வாய்ப்படாதபடி, அல்லது நம்முடைய அலட்சியம் காரணமாக நாம் இறக்கக்கூடாது என்பதற்காக நம்மை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும்.
“அரசாங்கத்தைக் குறை கூறினாலும் பரவாயில்லை, பிரதமர் மீது கோபமடைந்தாலும் பரவாயில்லை, நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். மக்கள் : ‘என்ன ஒரு முட்டாள் பிரதமர்’ என்று சொன்னாலும், பரவாயில்லை …,” என்று அவர் கூறினார்.

ஒரு பக்கச்சார்பற்ற தன்மைக்கு உத்தரவாதம்
இந்த விஷயத்தை நிர்வகிப்பது எவ்வளவு கடினம் என்று தனக்குத் தெரியும், ஆனால் அது பகிரப்பட்ட பொறுப்பு என்று பாகோ எம்.பி.யுமான அவர் விளக்கினார்.
அவர் எடுத்த அணுகுமுறை முழு அரசாங்க முறையும் அல்ல, ஒட்டுமொத்த சமூக முறைமைதான் என்றார்.
“ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், அப்போதுதான் நம்மால் கோவிட் -19 நோய்த்தொற்றைச் சமாளிக்க முடியும்,” என்று அவர் நேற்று இரவு ஆர்.டி.எம். மற்றும் பெர்னாமா டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட கோவிட் -19 தொற்று சவால் குறித்த சிறப்பு பேட்டியில் கூறினார்.
கோவிட் -19 தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக, மலேசியச் சுகாதார அமைச்சின் கோரிக்கை எதுவாக இருந்தாலும், ஊழியர்கள் மற்றும் உபகரணங்களின் தேவைகள் உட்பட நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
“சுகாதார அமைச்சுக்கு என்ன தேவை, நான் அறிவுறுத்தினேன், அவர்கள் எதைக் கேட்டாலும், நான் வழங்கினேன்,” என்று அவர் கூறினார்.
சுகாதார அம்சத்தைத் தவிர, எஸ்ஓபியை அமல்படுத்துவது குறித்தும் முஹைதீனிடம் கேட்கப்பட்டது, இது பல்வேறு சமூகக் குழுக்களுக்கு இருதரபட்ச தண்டனையுடன் பக்கச்சார்பானது என்று சிலர் குற்றம் சாட்டிவருவது குறித்து.
30 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் எஸ்ஓபிக்கு இணங்குவதைக் கண்காணிக்க, போதுமான அமலாக்க அதிகாரிகளை அரசாங்கத்தால் நியமிக்க முடியாது என்று முஹைதீன் பதிலளித்தார்.
அமலாக்கத்தில் எந்தவிதமான சார்பும் இல்லை என்று உறுதியளித்தார், ஆனால் அவற்றைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் போதுமான ஊழியர்கள் இல்லாததால் தவறவிடக்கூடிய தரப்பினர் இருக்கலாம் என்பதை முஹைதீன் ஒப்புக்கொண்டார்.
“கொள்கையைப் பொறுத்தவரை, நாங்கள் சார்புடையவர்கள் அல்ல. யாராக இருந்தாலும், அவர் அமைச்சரா, பிரதமரா, யாராக இருந்தாலும் அவர்கள் மீறினார்கள் என்றால், அதற்கு ஆதாரங்கள் இருந்தால், அவர்கர் தண்டனை, தண்டம் மற்றும் பலவற்றிலிருந்து தப்பிக்க முடியாது. அது உண்மை.
“ஆனால், அவரை ஏன் கைது செய்யக்கூடாது என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்? இந்த எஸ்.ஓ.பி.-இல் 30 மில்லியன் மலேசியர்கள் உள்ளனர், அவர்கள் அனைவரும் எஸ்.ஓ.பி.-க்கு உட்பட்டவர்கள்.
“நான் திரும்பக் கேட்க விரும்புகிறேன், இந்த 30 மில்லியனை நான் கவனித்துக் கொள்ள முடியுமா? உங்கள் உணவு, தூக்கம், எங்கெல்லாம் செல்கிறீர்கள் என்று?
“… யாராவது கொஞ்சம் தடுமாறினால், நான் (நிச்சயமாக) அவரைக் கவனித்துக் கொள்ள முடியுமா? அங்குச் செயலாக்க அதிகாரிகள் யாரும் இல்லையென்றால் … 30 மில்லியனைக் காக்க, 100,000 செயலாக்க அதிகாரிகளை நியமிக்க நான் விரும்பமாட்டேன்? இது சாத்தியமற்றது,” என்று அவர் கூறினார்.
அதனால்தான், மக்கள் தண்டனையை எதிர்கொள்ளாத வகையில் சுயக் கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது என்று முஹைதீன் கூறினார்.

கோவிட் -19 தொற்றின் தற்போதைய நிலைமை காரணமாக, எஸ்.ஓ.பி.-இல் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன, மேலும் இது சில தரப்பினருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்றார் அவர்.
இதற்கு முன்னர் எஸ்.ஓ.பி.-களை அமல்படுத்துவதில் இருதரபட்ச மற்றும் சார்புநிலை பற்றியப் பிரச்சினை நிறையப் பேசப்பட்டது, ஆனால் சமீபத்திய நோன்புப் பெருநாள் காலகட்டத்தில், அதிகாரிகள் கடுமையான கண்காணிப்பில் இருப்பார்கள், எல்லை கடக்கும் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று மக்களுக்கு நினைவூட்டப்பட்டது.
ஆனால், சில பிரபலங்களும் அரசியல்வாதிகளும், தங்கள் சமூக ஊடகங்களில் வெகுஜன கூட்டங்களின் படங்களைப் பதிவேற்றுவதைக் கண்டறிந்தனர், இது நோன்புப் பெருநாள் அன்று உறவுகளைச் சந்திக்கச் செல்ல அனுமதிக்காத எஸ்ஓபி-க்கு மாறாக உள்ளது.
பிரபலக் கலைஞரும் தொழில்முனைவோருமான நூர் நீலோஃபா மொஹமட் நூர் மற்றும் அவரது கணவர் முஹம்மது ஹரிஸ் மொஹமட் இஸ்மாயில் ஆகியோரும் அதில் அடங்குவர். அவர்கள் எஸ்ஓபிகளை மீறியதற்காக முன்னர் பல முறை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டதனால், பொது மக்களின் விவாதத்திற்கு உட்பட்டனர்.
கடந்த மாதம், கோவிட் -19 எஸ்ஓபி-ஐ மீறியதற்காக, மூன்று சிறு வணிகர்களுக்கு RM50,000 தண்டம் விதிக்கப்பட்டது, பின்னர் அது RM2,000 ஆக குறைக்கப்பட்டது.

























