கோவிட் -19 தடுப்பு மருந்தூசியைப் பெறுநரிடம் காட்ட அறிவுறுத்தப்பட்டது

ப்ரொடெக்ட் ஹெல்த் மலேசியா கீழ் இயங்கும், கோவிட் -19 தடுப்பூசி முயற்சியில் உதவுகின்ற மருத்துவ அதிகாரிகளுக்குத், தடுப்பூசி பெறுநர்களிடம் கோவிட் -19 தடுப்பூசி நிரப்பப்பட்ட மருந்தூசியைக் காண்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அஸ்ட்ராஸெனெகாவின் தன்னார்வத் தடுப்பூசி திட்டத்திற்காக, சில மருத்துவ அதிகாரிகள் குறைவான அளவுகளில் தடுப்பூசி அளவுகளை வழங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்த அறிவுறுத்தல் வந்துள்ளது.

அஸ்ட்ராஸெனெகா கோவிட் -19 தடுப்பூசியைப் பெறும் அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசிக்குப் பிறகு வெற்று மருந்தூசிகளையும் ஊசிகளையும் காட்டுமாறு அறிவுறுத்தப்பட்ட ஒரு செய்தியை மலேசியாகினி கண்டது.

சரியான அளவு – 0.5 மிலி – சுட்டிக்காட்டப்பட்டுள்ளதா என்பதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி உண்மையானது என்று சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் மலேசியாகினிக்கு உறுதிப்படுத்தினார்.

ஊசி போடும்போது, ஏராளமானோர் தடுப்பூசிகளைப் பதிவு செய்ததனால் அளவுகளின் பற்றாக்குறை குறித்த புகார்கள் வெளிவந்தன.

சில தடுப்பூசி பெறுநர்கள், கொடுக்கப்பட்ட தடுப்பு மருந்தூசியில் உள்ள அளவின் அடிப்படையில் “மிகக் குறைவு” என்பதை உணர்ந்தனர்.

புகார் அளித்தவர்களில் குறைந்தது இருவர், மலேசியாகினியிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர்களின் அளவு அதிகரிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

கோவிட் -19 நோய்த்தடுப்பு பணிக்குழு (சிஐடிதிஃப்) இந்த வழக்குகளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

ப்ரொடெக்ட் ஹெல்த் மலேசியா என்பது கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தை எளிதாக்குவதற்காக, தனியார் துறையின் மருத்துவ அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த சுகாதார அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாகும்.