நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக, மிக மோசமான எல்.ஆர்.டி. விபத்து

தலைநகரில், லைட் ரெயில் டிரான்சிட் சிஸ்டம் (எல்ஆர்டி) திட்டம், முதன்முதலில் டிசம்பர் 1996-இல், அம்பாங் மற்றும் சுல்தான் இஸ்மாயிலை இணைக்கும் கட்டம் 1 செயல்படத் தொடங்கியது.

ஸ்டார் எல்ஆர்டி என அழைக்கப்படும் இந்தச் சேவை ஸ்ரீ பெட்டாலிங் பகுதிக்கும் வழங்கப்படுகிறது.

இரண்டுமே இப்போது அம்பாங் வழிதடம் மற்றும் ஸ்ரீ பெட்டாலிங் வழிதடம் என மறுபெயரிடப்பட்டுள்ளன.

இது தவிர, கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து பெட்டாலிங் ஜெயா பகுதிக்கு மற்றொரு எல்.ஆர்.டி சேவையும் உள்ளது, இது முன்பு புத்ரா எல்.ஆர்.டி. என்று அழைக்கப்பட்டது, அதாவது கிளானா ஜெயா வழிதடமென்று.

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள எல்.ஆர்.டி., 1980-களில் இருந்து கோலாலம்பூர் முதன்மைத் திட்டப் போக்குவரத்து ஆய்வில், மூலதனத்திற்கு அதன் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்த ஓர் ஒருங்கிணைந்த இரயில் அமைப்பு தேவை என்று கண்டறியப்பட்டது.

இப்போது கிள்ளான் பள்ளத்தாக்கின் முக்கியப் பொது போக்குவரத்து முறைகளில் ஒன்றாக விளங்கும் அதன் சேவைகளின் போது சில அசம்பாவிதங்களும் நடந்துள்ளன.  அம்மூன்று வழித்தடங்கள் செயல்பாட்டின் தொடக்கத்திலிருந்து நிகழ்ந்த சம்பவங்கள் பின்வருமாறு :

  • அக்டோபர் 27, 2006 : செந்தூல் தீமோர் நிலையத்தில், அதன் கடைசி நிறுத்தத்தில் இரயிலை நிறுத்த முயன்றபோது, ஸ்டார்-எல்ஆர்டி இரயில் பெட்டிகளில் ஒன்று ஒரு கான்கிரீட் துணைக் கடந்து சறுக்கி தரையில் இருந்து கிட்டத்தட்ட 25 மீட்டர் தூரத்தில் தொங்கியது, ஆனால் இரயிலின் 6 பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லை.
  • 24 நவம்பர் 2007 : செந்தூல் தீமோர் நிலையத்தை நெருங்கும் போது, ஸ்டார் எல்ஆர்டி இரயிலின் நடுவில் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன, இது செந்தூல் தீமோரில் இருந்து சுல்தான் இஸ்மாயில் வரையிலான ஐந்து நிலையங்களில் இரயில் சேவையைப் பாதித்தது, மேலும் அந்த 5 இரயில்களில் 10 பயணிகள் சிக்கியிருந்தனர், அவர்களுக்குக் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
  • 24 செப்டம்பர் 2008 : ஒரு ஸ்டார்-எல்ஆர்டி இரயில் மற்றொரு இரயிலின் பின்புறத்தில் மோதியதில் நான்கு பயணிகள் இலேசாக காயமடைந்தனர், இந்தச் சம்பவத்தின் போது இரண்டடு இரயில்களுக்குள்ளும் சுமார் 300 பயணிகள் இருந்தனர்.
  • 22 ஜூலை 2015 : செத்தியாவங்சா நிலையம் மற்றும் யுனிவர்சிட்டி ஆகிய இரண்டு தனித்தனி இடங்களில் பிரேக் சேதமடைந்த சம்பவம், இருப்பினும் பயணிகளுக்கு காயங்கள் ஏற்படவில்லை.
  • 9 செப்டம்பர் 2017 : செத்தியாவங்சா-கே.எல்.சி.சி வழி தடத்தில் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவை சீர்குலைந்தது, இதனால் பயணிகள் 20 நிமிடங்கள் இரயிலில் சிக்கிக்கொண்டனர்.
  • 24 மே 2021 : கம்போங் பாரு நிலையம் மற்றும் கே.எல்.சி.சி. இடையே சுரங்கப்பாதை சம்பவத்தில், கிளானா ஜெயா வழிதடத்தில் இரண்டு எல்ஆர்டி இரயில்கள் மோதியதில் 47 பயணிகள் பலத்த காயமடைந்தனர், 166 பேர் இலேசாக காயத்திற்கு இழக்காகினர்.
  • பெர்னாமா