பயணிகள் இல்லாமல், வெற்று பெட்டிகளை ஏற்றிச் சென்ற இரயிலைத் தவறான திசைக்கு முடுக்கிவிட்ட ஓட்டுநரின் அலட்சியம்தான், நேற்றிரவு கிளானா ஜெயா எல்ஆர்டி விபத்துக்குக் காரணம் என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் தெரிவித்தார்.
திஆர் 40 இரயிலைத் தவறான திசையில் ஓட்டி வந்த ஹோஸ்டலரின் அலட்சியம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
“தெற்கு நோக்கிச் செல்ல வேண்டிய திஆர்40 டாங் வாங்கி நிலையம் நோக்கிச் சென்ற திசையில், வேறுபட்ட நோக்குநிலையில் வடக்கு நோக்கி நகர்ந்தது, இதன் விளைவாக திஆர்40 மற்றும் திஆர்81 இடையே மோதல் ஏற்பட்டது.
“நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் எனக்குச் சமர்ப்பித்தப் பூர்வாங்கக் கண்டுபிடிப்புகள் இவை,” என்று அவர் இன்று இயங்கலையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.