உலகச் சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவில் மலேசியா – டபிள்யு.எச்.ஓ. பரிந்துரை

2021-2024 காலத்திற்கு மலேசியா மற்றும் ஜப்பானைப் புதிய நிர்வாகக் குழு (ஈபி) உறுப்பினர்களாக இணைக்க உலகச் சுகாதார அமைப்பு (டபிள்யு.எச்.ஓ.) ஆதரவு அளித்துள்ளது.

மலேசிய உறுப்பியத்திற்குச் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தலைமை தாங்குவார், சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மாற்று உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

“ஈபி மூன்று ஆண்டு காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுகாதாரத் துறையில் தொழில்நுட்பத் தகுதி வாய்ந்த 34 உறுப்பினர்களைக் கொண்டது. ஒவ்வொருவரும் உலகச் சுகாதாரச் சட்டமன்றத்தால் (டபிள்யு.எச்.ஏ.) தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் உறுப்பு நாடால் நியமிக்கப்படுகிறார்கள்.

“ஈபி- இன் முக்கியச் செயல்பாடுகள், டபிள்யு.எச்.ஏ.-இன் முடிவுகளையும் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்துவதும், அதை அறிவுறுத்துவதும் ஆகும்; பொதுவாக டபிள்யு.எச்.ஓ.- இன் பணிகளை எளிதாக்குவது அதன் பணி,” என்று அறிவிப்பை வெளியிட்டபோது நூர் ஹிஷாம் கூறினார்.

ஒப்பந்தக் காலம் நிறைவடைந்த சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் மாற்றாக மலேசியாவும் ஜப்பானும் அதில் இணைக்கப்பட்டுள்ளன.

டபிள்யு.எச்.ஓ.- இன் சமீபத்தில் முடிவடைந்த 74-வது அமர்வுடன் இணைந்து நடைபெற்ற, டபிள்யு.எச்.ஓ. ஈபி-இன் 149-வது அமர்வைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று நூர் ஹிஷாம் கூறினார்.

“கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, உலகெங்கிலும் இருந்து ஈபி உறுப்பினர்கள் இணைந்தவுடன் கூட்டம் மெய்நிகரில் நடைபெற்றது.

“இந்தச் சந்திப்பு பின்னர் டாக்டர் பேட்ரிக் அமோத்தை (கென்யா) அடுத்த ஒரு வருடத்திற்கான புதிய ஈபி தலைவராகத் தேர்ந்தெடுத்தது,” என்று அவர் மேலும் கூறினார்.

அடுத்த டபிள்யு.எச்.ஏ.-க்கான பரிசீலிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சி நிரல் மற்றும் தீர்மானங்களை உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டதும், வருடாந்திர ஈபி கூட்டம் பொதுவாக ஜனவரி மாதம் நடைபெறும் என்று நூர் ஹிஷாம் கூறினார்.

“இரண்டாவது குறுகிய கூட்டம் ஒன்று, மே / ஜூன் மாதத்தில் நடைபெறும், இது முந்தைய டபிள்யு.எச்.ஏ.-ஐப் பின்பற்றியது,” என்று அவர் கூறினார்.

மலேசியா முன்னர் மூன்று முறை ஈபி உறுப்பினராகப் பணியாற்றியுள்ளது என்று நூர் ஹிஷாம் கூறினார், மேற்கு பசிபிக் பிராந்தியத்திற்கு நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

“பிற உலகளாவியச் சுகாதார நிகழ்ச்சி நிரல்களைத் தவிர, 2020-ஆம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் (2021-2030) பாதுகாப்பான மற்றும் மலிவு அறுவை சிகிச்சைக்கான செயல் கட்டமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, பாதுகாப்பான மற்றும் மலிவான அறுவை சிகிச்சைக்கு மலேசியாவும் பரிந்துரைக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.