அஸ்மின் : பி.கே.பி. 3.0 இயக்க அனுமதிகளை நிர்ணயிப்பது மிட்டி மட்டுமல்ல

தற்போதைய முழு நடமாட்டக் கட்டுப்பாடு காலத்தில், செயல்பட அனுமதி அளிக்கும் ஒரே தரப்பு தான் அல்ல என்று சர்வதேச வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு (மிட்டி) கூறியது.

அதன் அமைச்சர் அஸ்மின் அலி, தொழில்துறை திரையிடலில் பல்வேறு அமைச்சுகள் ஈடுபட்டுள்ளன, அவை மிட்டியால் இயக்கப்படும் கோவிட் -19 நுண்ணறிவு மேலாண்மை அமைப்பு (சிம்ஸ்) 3.0 மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தன என்று சொன்னார்.

இப்போது வரை, 15 அமைச்சுகள் சிம்ஸ் 3.0-ஐப் பயன்படுத்தி, அந்தந்தத் துறைகளுக்கு ஏற்ப செயல்பட அனுமதி பெறுவதற்கான மதிப்பீட்டு செயல்முறையை எளிதாக்குகின்றன என்றார் அவர்.

விண்ணப்பத்தை அமைச்சு உறுதிப்படுத்திய பின்னர், சிம்ஸ் 3.0 மூலம் செயல்பட அனுமதி கடிதத்தை நிறுவனம் தொடர்ந்து அச்சிடலாம் என்று அஸ்மின் கூறினார்.

“இருப்பினும், வேளாண் அமைச்சு மற்றும் வேளாண் அடிப்படையிலான கைத்தொழில் (மாஃபி) போன்ற சில அமைச்சுகளும் அவற்றின் சொந்த ஒருங்கிணைந்த பணி அனுமதி ஒப்புதல் முறையைப் பயன்படுத்துகின்றன.

“போக்குவரத்து அமைச்சு அதே நோக்கத்திற்காக ஸ்மைல் (Smile) எனும் (லொஜிஸ்டிக்ஸ் தொழில்துறை தகவல் அமைப்பு) அமைப்பு முறையைப் பயன்படுத்துகிறது.

எனவே, செயல்படுவதற்கான ஒப்புதல் கடிதங்கள் சிம்ஸ் 3.0-ஐப் பயன்படுத்தும் அமைச்சுகளிடமிருந்து உறுதிப்படுத்தலைப் பெற்ற பின்னர், மிட்டியால் வழங்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்களின் இலக்கு குழுக்களுக்குப் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்ட பிற அமைச்சுகளாலும் வழங்கப்படுகின்றன,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட கோவிட் -19 தொற்றைச் சமாளிக்க முழு கதவடைப்பு செயல்திறன் குறித்து பல தரப்பினரும் கேள்விகளை எழுப்பியதால் இது தெளிவுபடுத்தப்பட்டது.

திறன் 60 விழுகாடாக வரையறுக்கப்பட்டுள்ளது

பல பொருளாதார மற்றும் சமூகத் துறைகளை மூட உத்தரவிடப்பட்டபோதும், இன்னும் சில நிறுவனங்கள் அல்லது வணிகங்கள் திறந்த நிலையில் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனர், இது மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் பி.கே.பி. 3.0-இன் குறிக்கோளுக்கு முரணானது என்பதால்.

மற்றொரு மூத்த அமைச்சரான இஸ்மாயில் சப்ரி யாகோப், நேற்று தனது முகநூலில் வெளியிட்ட சிக்கலான இடுகை ஒன்று மிட்டி மீதான பல ஊகங்களைத் தூண்டியது குறிப்பிடத்தக்கது.

நேற்று, தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்) உடனடியாக மூட உத்தரவிடப்படுவதற்கு முன்னர், மதுபான நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கிய ஒப்புதல் குறித்தும் பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர்.

நிதி மற்றும் வங்கி நிறுவனங்கள் இயங்குவதற்கான அனுமதி கடிதங்களை வழங்குவது தேசிய வங்கியின் பொறுப்பு என்றும் அஸ்மின் கூறினார்.

ஒரு வணிகத் துறை, முக்கியமான சேவையாக கருதப்படுகிறதா அல்லது நேர்மாறாக இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு, மிட்டி’க்கு மட்டும் இல்லை என்று அவர் கூறினார்.

“இந்த அறிவிக்கப்பட்ட பி.கே.பி.யை அமல்படுத்துவதன் மூலம், தொழிலாளர் திறன் 60 விழுக்காட்டுடன், வரையறுக்கப்பட்ட 17 அத்தியாவசிய சேவைகளைத் தவிர அனைத்து பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது.

“எம்.கே.என். செயல்பட அனுமதிக்கப்பட்ட துறைகளில் உற்பத்தி, விவசாயம், மீன்வளம், கால்நடைகள், தோட்டம் மற்றும் பொருட்கள்; கட்டுமானம் மற்றும் விநியோக வர்த்தகம் ஆகியவை அடங்கும்,” என்று அவர் கூறினார்.

இன்று காலை 7.30 மணி நிலவரப்படி, சிம்ஸ்-இல் 10.2 மில்லியன் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட 586,308 விண்ணப்பங்கள் உள்ளன என்று அஸ்மின் கூறினார்.

மொத்தத்தில், சிம்ஸ் மூலம் அச்சிடப்பட்ட இயக்க அனுமதி கடிதங்களில் 128,150 மட்டுமே மலேசியா முழுவதும் 1.57 மில்லியன் தொழிலாளர்களை உள்ளடக்கியது.

சிம்ஸ் 3.0 மீறப்பட்டதாகவும், செயல்பட அனுமதிக்கப்படாத சில துறைகள் ஒப்புதல் பெற்றதாகவும் கூறிய சில தரப்பினரின் புகார்களையும் மிட்டி கவனிக்கிறது என்றார் அவர்.

“இந்த முறையைச் செயல்படுத்துவதில், வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்காக சிம்ஸ் 3.0 அமைப்பு குறித்த எந்தவொரு புகார்களுக்கும் விமர்சனங்களுக்கும் மிட்டி திறந்திருக்கும்.

“அமலாக்க பிரிவு மூலம், மிட்டி மற்ற அமலாக்க முகவர் நிறுவனங்களுடன் சேர்ந்து எஸ்ஓபி பி.கே.பி 3.0 செயல்படுத்துவதைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்தும்,” என்று அவர் கூறினார்.