பேரழிவு பயன்பாட்டிற்கான நிபந்தனைக்குட்பட்ட பதிவுக்கு, அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியைத் தாய்லாந்தின், இரண்டாவது உற்பத்தியாளரான சியாம் பயோசைன்ஸ் கோ லிமிடெட்-க்கு ஒப்புதல் அளிக்க, மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் (பி.பி.கே.டி.) ஒப்புதல் அளித்தது.
நாட்டில், தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்) பயன்பாட்டிற்கான அஸ்ட்ராஸெனெகா விநியோகத்தின் உற்பத்தியாளராக அந்த உற்பத்தியாளர் இருப்பார் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
“சியாம் பயோசைன்ஸ் கோ லிமிடெட் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி வழங்கல், தடுப்பூசி விகிதத்தை வேகமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
இன்று மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்தைச் சந்தித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2-ம் தேதி, ஐரோப்பிய நாடுகளுக்கான அஸ்ட்ராஸெனெகா உற்பத்தியாளரான மெடிம்முன் பார்மா பி.வி.-இன் நிபந்தனைக்குட்பட்ட பதிவுக்கு பி.பி.கே.டி. ஒப்புதல் அளித்தது.