ஜூன் 2 முதல் கராக் செத்யா இடைநிலைப் பள்ளியில், செயல்படத் தொடங்கிய கோவிட் 19 தடுப்பூசி மையத்தைப் பார்வையிட சென்ற சபாய் சட்ட மன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜு, முதன்மையாக அங்குத் தடுப்பூசி மையம் அமைத்த சுகாதார அமைச்சுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
தான் கொண்டு வந்திருந்த முககவசம், செனிடைஸ்சர் ஆகியவற்றை அந்த மையத்திடம் சமர்ப்பித்த அவர், அங்குச் செயல்பட்ட குழுவிற்குத் தனது பாராட்டைத் தெரிவித்தார்.
கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதனால் தடுப்பூசி மையம் அமைப்பது மிகவும் முக்கியமாகும். அப்படி அமையும் மையம் மக்களின் கைகளுக்கு எட்டும் வகையில் இருப்பதும் முக்கியமாகும்.
ஒரு தொகுதியில் ஒரு தடுப்பூசி மையம் இருக்கக் குறைந்தபட்சம் 8,000 பேர் மை செஜஹ்தெராவின் மூலம் பதிவு செய்திருக்க வேண்டும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கராக் சபாயில் பதிவுசெய்யப்பட்டது 4,000 பேர்கள் மட்டுமே. போதுமான பதிவு இல்லாததால் 3700 பதிவுகள் கொண்டுள்ள பெலங்கை தொகுதிகளுடன்
இணைக்கப்பட்டுக் கராக் செத்தியா இடைநிலைப் பள்ளியின் தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டனர்.
பெலங்கை காரக்கிலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ளது. தடுப்பூசிக்காகக் கராக்கை அடையும் பெலங்கை மக்கள் நீண்ட தூரம் பயணமும் பயணத்திற்குப் பணம் செலவு செய்வதும் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள் என்கிறார் காமாட்சி.
மேலும் இப்படிச் செய்வது கராக்கில் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இது கோவிட் வைரஸ் பரவுவதற்கான ஒரு மையமான உருவாக வாய்ப்பளிக்கும். இப்படிச் செய்வது சிறந்த உக்தி அல்ல என்கிறார் காமாட்சி.
“ஆகவே சுகாதார அமைச்சு கிராமப்புறங்களில் மக்கள் சென்றடையக்கூடிய பகுதிகளில் அதிகத் தடுப்பூசி மையங்களை அமைக்க வேண்டும். இதனால் தடுப்பூசி திட்டத்தைச் சரியான முறையில் மேற்கொள்ள இயலும் அதுமட்டுமல்லாது பிரதானத் தடுப்பூசி மையங்களிலும் மக்களின் கூட்டத்தைத் தவிர்கலாம்.” இதுவே எனது கோரிக்கையாகும் என்கிறார்.
பல தனியார் நிறுவனங்கள் அவர்களின் ஊழியர்களுக்குத் தடுப்பூசிகளைப் பணம் செலுத்திப் பெறுவதற்குக்கூடத் தயாராக உள்ளார்கள். அவர்களின் தடுப்பூசி திட்டத்தை வேலைச் செய்யும் இடத்தின் அருகிலுள்ள பகுதிகளிலும் செய்யலாம்.
எனவே, அரசாங்கம் தடுப்பூசி செயல்முறையை விரைவுபடுத்துவது அவசியம் என்கிறார் அவர்.