தேர்தல் நடத்த அம்னோ விண்ணப்பம் – எம்.கே.என். நிராகரித்தது

கோவிட் -19 நேர்வுகள் அதிகரித்து வரும் இச்சமயத்தில், இந்த மாதம் கட்சியின் தேர்தலை நடத்துவதற்கான அம்னோவின் விண்ணப்பத்தைத் தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்) நிராகரித்தது.

“தற்போதைய கோவிட் -19 நிலைமை இன்னும் மோசமாக இருப்பதால், முன்னதாகத் திட்டமிட்டப்படி கட்சித் தேர்தலை நடத்துவதற்கான அம்னோவின் விண்ணப்பத்தை எம்.கே.என். நிச்சயம் நிராகரிக்கும்,” என்று எம்.கே.என்.-இன் ஓர் ஆதாரம் தெரிவித்தது.

“அம்னோ பல பிரிவுகளையும் கிளைகளையும் கொண்ட ஒரு கட்சி, தேர்தல் நடத்தப்பட்டால் பல கூட்டங்கள் இருக்கும்.

“இது நடந்தால், ஒரு புதிய திரளை உருவாகும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

மே 19-ம் தேதி, அம்னோ, கட்சியின் தேர்தலைத் தொடர விரும்புவதாகக் கூறியது, அதேசமயம், அதிகாரிகள் எடுக்கும் எந்தவொரு முடிவிற்கும் கட்டுப்படுவோம் என்றும் அது தெரிவித்ததாக மலேசியாகினி செய்தி வெளியிட்டது.

தேர்தலை நடத்துவதற்கான கட்சியின் விண்ணப்பத்தை எம்.கே.என். நிராகரித்தது குறித்து அம்னோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மலேசியாகினிக்கு தெரிவிக்கப்பட்டது.

“கோவிட் -19 தொற்றுநோயின் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கான முயற்சிகளில் இப்போது அரசாங்கத்தின் கவனம் உள்ளது,” என்று அந்த வட்டாரம் மேலும் கூறியது.

இருப்பினும், இந்த விவகாரம் குறித்த அறிவிப்பு கடிதம் அம்னோவுக்கு அனுப்பப்பட்டதா இல்லையா என்பதை அந்த வட்டாரம் தெரிவிக்கவில்லை.

இந்த முடிவு குறித்து மலேசியாகினி அம்னோ தலைவர்களிடமிருந்து உறுதிப்படுத்த முயல்கிறார்.