ஜூன் 13 மற்றும் 14 ஆகியத் தேதிகளில், பள்ளி அமர்வு மீண்டும் திறக்கப்படும் போது, இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பி.டி.பி.ஆர்.) பள்ளி அமர்வை அரசாங்கம் தொடரும்.
கோவிட் -19 நிலைமையைப் பொறுத்து, நேருக்கு நேர் பள்ளி அமர்வுகளை நடத்துவதன் தகுதியை அரசாங்கம் மறு மதிப்பீடு செய்வதற்கு முன்னர், பி.டி.பி.ஆர். அமர்வு 25 நாள்களுக்கு நீடிக்கும் என்று மூத்தக் கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.
இம்முடிவு அமைச்சில் பதிவு செய்யப்பட்ட தனியார், சர்வதேச மற்றும் வெளிநாட்டு பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றார் அவர்.
பி.டி.பி.ஆர். அமர்வு ஜூலை 16 மற்றும் ஜூலை 17 முதல், இடைக்காலப் பள்ளி விடுமுறைக்கு 25 நாட்களுக்கு முன்னதாக நடைபெறும் என்று ராட்ஸி கூறினார்.
“பள்ளி விடுமுறை காலத்திற்குப் பிறகு (ஜூலை 16 மற்றும் 17), கல்வி அமைச்சு ஒரு வாரத்திற்கு முன்னதாகப் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கையைத் தெரிவிக்கும்.
“அந்த நேரத்தில், கோவிட்-19 தொற்று நிலைமையை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த நடவடிக்கை என்னவென்று அமைச்சு அறிவிக்கும்,,” என்று அவர் இன்று காலை நடந்த சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.