சுகாதார அமைச்சு : ஆபத்தான மாறுபாடுகளின் 23 நேர்வுகள் கண்டறியப்பட்டன

நாட்டில், ஜூன் 3 முதல் 8 வரையில், தொடர்ச்சியான மரபணு கண்காணிப்பின் விளைவாக, 23 கோவிட் -19 வேரியண்ட் ஆஃப் கன்சர்ன் (விஓசி) கண்டறியப்பட்டன, அவற்றில் 18 நேர்வுகள் பீட்டா மாறுபாடுகள் (பி.1.351) மற்றும் நான்கு நேர்வுகள் டெல்டா வகைகள் (பி.1.617.2) ஆகும்.

சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, தனது முகநூல் பக்கத்தின் ஒரு பகிர்வில், பீட்டா மாறுபாடு வழக்குகளில் (பி .1.351) சிலாங்கூரில் எட்டு நேர்வுகள், புத்ராஜெயாவில் மூன்று நேர்வுகள், கோலாலம்பூர், மலாக்கா மற்றும் கெடாவில் தலா இரண்டு நேர்வுகள், பேராக் மற்றும் பெர்லிஸில் முறையே ஒன்று எனப் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

டெல்டா மாறுபாடு (பி .1.617.2) புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூரில் தலா இரண்டு நேர்வுகள் கண்டறியப்பட்டன.

நேற்றைய நிலவரப்படி, கோவிட் -19 நேர்வுகளின் மொத்த விஓசி மற்றும் விஓஐ மாறுபாடுகளின் எண்ணிக்கை 161 ஆகும், அவற்றுள் 145 விஓசி மற்றும் 16 விஓஐ என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக டாக்டர் நூர் ஹிஷாம் சொன்னார்.

சார்ஸ்-சிஓவி-2 கிருமிக்கான தொடர்ச்சியான மரபணு கண்காணிப்புக்காக, கோவிட் -19 ஸ்கிரீனிங் சோதனைகளை அதிகரித்தல், தொடர்புகளைக் கண்டறிதல், நேர்மறையானவர்களைத் தனிமைப்படுத்தல் மற்றும் பிற பொது சுகாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட தொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் சுகாதார அமைச்சு தொடர்ந்து வலுப்படுத்தும்,” என்று அவர் கூறினார்.

மந்தை நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு நாட்டிற்கு உதவும் முயற்சியில் தடுப்பூசி பெற, தங்களையும் குடும்ப உறுப்பினர்களையும் உடனடியாகப் பதிவு செய்யுமாறு டாக்டர் நூர் ஹிஷாம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

-பெர்னாமா