அரசாங்கத்தின் மக்கள் பராமரிப்பு திட்ட (பிபிஆர்) உதவித் தொகை முறையீட்டு விண்ணப்பத்திற்காக, உள்நாட்டு வருவாய் வரி வாரியம் (எல்.எச்.டி.என்.) அரசு சிறப்பு உதவி முகப்புகளை (பி.கே.கே) நேற்று முதல் திறந்துள்ளது.
இதற்கான மேல் முறையீட்டு விண்ணப்பங்களை, ஜூன் 15 முதல் ஜூன் 30-ம் தேதி வரையில் சமர்ப்பிக்கலாம் என நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.
வருமான வரி வாரியத்திற்கு வருகிறவர்கள் மைசெஜாத்தெரா செயலியில் ஆரோக்கிய பாதுகாப்பு குறித்த சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவர். மேலும், எஸ்.ஓ.பி. நடைமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவதோடு, முகக்கவரி அணிந்து, சமூக இடைவெளியையும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.
அந்த அறிக்கையின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும், வேலை நாட்கள் அடிப்படையில், காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை முகப்புகள் திறந்திருக்கும். இருப்பினும், அசௌகரியங்களைத் தவிர்க்க, நேர்முகச் சந்திப்பை முன்னதாக உறுதிப்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிபிஆர் குறித்த மேல் விவரங்களுக்கு 1800-88-2747 எனும் எண்களில் வார நாட்களில், திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அழைத்துப் பேசலாம்.
எல்.எச்.டி.என் அலுவலகங்கள் மற்றும் கிளைகளின் பட்டியலைச் சரிபார்க்க phl.hasil.gov.my/pdf/pdfam/Notis_Penutupan_Cawangan_LHDNM_1.pdf என்ற இணைப்பை அணுகலாம்.