முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும்போது, கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியம் (சிஐடிபி) சோதனை செய்த மூன்று கட்டுமான தளங்களில் ஒன்று கோவிட் -19 எஸ்ஓபிக்களுக்கு இணங்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.
செயல்பாட்டில் இருந்த 446 கட்டுமான தளங்களில், எஸ்ஓபிகளை மீறியதற்காக 150-ஐ மூடுமாறு சிஐடிபி உத்தரவிட்டதாக பொதுப்பணி அமைச்சு தெரிவித்துள்ளது.
150 கட்டுமான தளங்கள், 45 சரவாக், சிலாங்கூர் (24), மலாக்கா (16), பினாங்கு (10), திரெங்கானு (10), சபா (9), ஜொகூர் (7), கோலாலம்பூர் (6), பஹாங் (6), பேராக் (5), கெடா (4), நெகிரி செம்பிலான் (4), பெர்லிஸ் (3), கிளந்தான் (1) ஆகும்.
செயல்பாட்டில் உள்ள 446 தளங்களில், 150 கட்டுமான தளங்கள் (34 விழுக்காடு) எஸ்ஓபிக்களுடன் இணங்கவில்லை என்பது கண்டறியப்பட்டது, மேலும் 296 (66 விழுக்காடு) தளங்கள் எஸ்ஓபிக்களை முறையாகப் பின்பற்றியுள்ளன.
எவ்வாறாயினும், மூட உத்தரவிடப்பட்ட பதினொரு கட்டுமான தளங்கள் எஸ்ஓபிக்களின் தொகுப்புக்கு இணங்க தொடங்கியதும் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கட்டுமானத் துறை செயற்பாட்டாளர்களுக்கு சிஐடிபி மூலம் RM500,000 வரை தண்டம் விதிக்கப்படலாம் அல்லது அவர்களின் ஒப்பந்ததாரர் பதிவு சான்றிதழ்கள் இடைநிறுத்தப்படலாம் என்றும் பொதுப்பணி அமைச்சு எச்சரித்தது.