ஜூன் 24-ம் தேதி, பேராக் பக்காத்தான் ஹராப்பான் தனது புதிய தலைமைத்துவக் குழுவை அறிவித்தது.
பேராக்கில், அக்கூட்டணியின் தலைமையை அமானா உதவித் தலைவர் முஜாஹிட் யூசோப் ஏற்றார்.
பி.எச். கூட்டணியிலிருந்து விலகி, பெர்சத்து கட்சியுடன் வெளியேறிய முன்னாள் பேராக் மந்திரி பெசார் அஹ்மத் பைசல் அஸுமுக்குப் பதிலாக, கடந்தாண்டு பிப்ரவரியில், பிஎச் தலைமை மன்றத்தால் முஜாஹிட் பேராக் பிஎச் தலைவராக நியமிக்கப்பட்டார்.
“பேராக் மாநிலக் கூட்டணியின் அனைத்து தலைவர்களும் – ங்ஙா கோர் மிங் (டிஏபி), அஸ்முனி அவி (அமானா) மற்றும் ஃபர்ஹாஷ் வஃபா சால்வடோர் (பி.கே.ஆர்.) – பேராக் பி.எச். துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பத்து காஜா எம்.பி. சிவக்குமார், பேராக் பி.எச். தலைமைச் செயலாளராகத் தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.
இதற்கிடையில், பேராக் ஏ.எம்.கே. தலைவர் மொஹமட் ஹைருல் அமீர் சப்ரி மாநிலப் பி.எச். இளைஞர் தலைவராக நியமிக்கப்பட்டார்.
மேலும், வனிதா ஹராப்பான் பேராக்-க்குத் தலைவராக வோங் மெய் இங்-கும் (டிஏபி), மாநிலப் பொருளாளராகப் பி.கே.ஆர். துணைத் தலைவர் தான் கார் ஹிங்-கும் தொடர்ந்து இருப்பர்.
பி.எச். செயற்குழு உறுப்பினர்களாக, டிஏபி-யைச் சேர்ந்த ங்கே கூ ஹாம் மற்றும் வோங் மெய் இங்; அமானாவைச் சார்ந்த ஃபக்ருல்தீன் மொஹமட் மொஹட் ஹாஷிம் மற்றும் அஹ்மத் தெர்மிஸி ரம்லி; மற்றும் பி.கே.ஆர். தலைவர்களான பல்டிப் சிங் மற்றும் எம்.ஏ.தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பேராக் அமானாவின் முன்னாள் துணைத் தலைவர், முகமது நிசார் ஜமாலுதீன் பேராக் பி.எச். தலைமைத்துவக் குழுவில் இருந்து நீக்கப்பட்டார், அவருக்குப் பதிலாக அஹ்மத் தெர்மிசி நியமிக்கப்பட்டார்.