சுகாதார அமைச்சு : இனவாரியாக மருத்துவ அதிகாரிகளை நியமிப்பது எங்கள் நிலைப்பாடு அல்ல

மருத்துவ அலுவலர்களை இனரீதியாக நியமிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றத் திட்டம் அமைச்சின் நிலைப்பாடு அல்ல என்று சுகாதார அமைச்சு விளக்கமளித்தது.

மொஹமட் ஷபிக் அப்துல்லா

மலேசிய மருத்துவச் சங்கத்தின் (எம்.எம்.ஏ.) அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சு இவ்வாறு கூறியது, மருத்துவ அதிகாரிகளை இன அடிப்படையில் பணியமர்த்துவதற்கான முன்மொழிவை அமைச்சு நிராகரித்தது.

இன்று ஓர் அறிக்கையில், சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் மொஹமட் ஷபிக் அப்துல்லா, ஜூன் 23 அன்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபாவின் அறிக்கையின் முதல் பத்தி குழப்பத்தையும் தவறான விளக்கத்தையும் ஏற்படுத்தியது என்றார்.

“இது தொடர்பாக ஏற்பட்ட குழப்பம் மற்றும் தவறான விளக்கத்தைச் சுகாதார அமைச்சு தெளிவுபடுத்த விரும்புகிறது.

“அறிக்கையின் முதல் பத்தியில் உள்ள செய்தி, சுகாதார அமைச்சின் நிலைப்பாடு அல்ல, அது மலேசியப் பொது சுகாதார மருத்துவர்கள் சங்கம் (பிபிபிகேஎம்) மற்றும் மலேசிய இஸ்லாமிய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையின் சாராம்சம் மற்றும் கருத்துகளின் ஒரு பகுதி.

டாக்டர் ஜைனல் அரிஃபின் ஓமார்

“இரு சங்கங்களும் எழுப்பிய பிரச்சினைகள் குறித்த சுகாதார அமைச்சின் விளக்கம், ஊடக அறிக்கையின் இரண்டாவது பத்தியிலிருந்து உள்ளது.

“இந்த விளக்கத்தால் சுகாதார அமைச்சின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாடு குறித்த அனைத்து தரப்பினரின் குழப்பத்தையும் தவறான விளக்கத்தையும் சரிசெய்ய முடியும் என்று நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

இன அடிப்படையில், புதிய மருத்துவ அதிகாரிகளைப் பணியமர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டுமெனும் திட்டத்தை எம்.எம்.ஏ. நேற்று நிராகரித்தது.

கடந்த வாரம், பிபிபிகேஎம் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜைனல் அரிஃபின் ஓமார், மருத்துவப் பட்டதாரிகளுக்கு, “குறிப்பாக பூமிபுத்ராக்களிடையே” சிவில் சேவையில் நிரந்தர இடங்களைப் பெற இந்த பரிந்துரை உதவும், இதனால் வேலையின்மை குறையும் என்று கூறி இருந்தார்.

புதன்கிழமையன்று ஓர் அறிக்கையில், இந்தத் திட்டத்தை அரசாங்கம் கவனிக்கும் என்று ஆதாம் கூறினார்.

அரசாங்கம் இன்னும் மருத்துவப் பட்டதாரிகளை எடுத்துக்கொண்டிருக்கிறது, ஆனால் அது இன அடிப்படையில் செய்யப்படும் என்று தாம் கூறவில்லை என்று ஆதாம் சொன்னார்.

டாக்டர் பூ செங் ஹாவ்

இதற்கிடையில், இன்று ஒரு தனி அறிக்கையில், டிஏபி அரசியல்வாதியும் மருத்துவருமான டாக்டர் பூ செங் ஹாவ், இனரீதியாக புதிய மருத்துவ அதிகாரிகளை நியமிப்பதை நிராகரித்த எம்எம்ஏவின் அறிக்கையை முழுமையாக ஆதரிப்பதாகக் கூறினார்.

“மலேசியாவில், மிகக் குறைந்த இனவெறி கொண்ட துறைகளில் மருத்துவத் துறையும் ஒன்றாகும், அங்கு மருத்துவ ஊழியர்கள் இனம் பொருட்படுத்தாமல் தொற்றுநோயை (கோவிட் -19) எதிர்த்துப் போராடுவதில் இணைந்து பணியாற்றுகின்றனர்,” என்று அவர் கூறினார்.