இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, மலேசியா மற்றும் உலகின் பல நாடுகளில் கோவிட் -19 பற்றிய சமீபத்திய தகவல்கள் இங்கே.
ஜோன் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் வள மையத் தரவு, 181,000,826 கோவிட் -19 நேர்வுகள் மற்றும் 3,921,800 இறப்புகள் பதிவாகியுள்ளதைக் காட்டுகிறது.
உலகெங்கிலும் மொத்தம் 2,886,929,096 மருந்தளவு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் அதிக எண்ணிக்கையிலான நேர்மறை நேர்வுகள் மற்றும் இறப்புகளைப் பதிவு செய்த நாடுகளில் முதலிடத்தில் உள்ளன. இருப்பினும், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சில நாடுகளில் தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் புதிய நேர்வுகள் மற்றும் இறப்புகள் குறைந்துள்ளன.
இந்தோனேசியாவில் தற்போது புதிய நேர்வுகள் அதிகரித்து வருகின்றன, மேலும் அதன் தடுப்பூசி திட்டத்தை மேம்படுத்தவும் செயல்பட்டு வருகிறது.
கீழேயுள்ள அட்டவணை, மலேசியா உள்ளிட்ட பல ஆசியான் நாடுகளின் நிலையை ஜூன் 28 காலை 10 மணி வரையில் காட்டுகிறது, தொற்றுநோய் இன்னும் பரவலில் உள்ள நிலையில், தடுப்பூசி செயல்முறையும் முழு வீச்சில் நடந்து வருகிறது.
உலகச் சுகாதார நிறுவனம், ஆசியான் நாடுகள், எங்கள் உலகத் தரவு (Our World in Data) மற்றும் ஜோன் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் வள மையம் ஆகியவற்றின் தரவை அடிப்படையாகக் கொண்டது.
- பெர்னாமா