சுல்தானின் வழக்கறிஞராக ஆள்மாறாட்டம் செய்ததாகக் குற்றச்சாட்டு : கமால் ஹிஷாம் ஜொகூர் காவல்துறைத் தலைவர் மீது வழக்கு

ஜொகூர் அரண்மனையின் வழக்கறிஞராக ஆள்மாறாட்டம் செய்ததாக தன் மீது குற்றம் சாட்டியதற்காக, வழக்கறிஞர் கமால் ஹிஷாம் ஜாஃபர், ஜொகூர் காவல்துறைத் தலைவர் அயோப் கான் மைடின் பிட்சை மீது வழக்குத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, ஜூன் 23-ம் தேதி, ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மலேசியாகினியுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட கூற்று அறிக்கையின் அடிப்படையில், ஏப்ரல் 22-ம் தேதி அயோபின் செய்தியாளர் சந்திப்பைக் கமால் ஹிஷாம் குறிப்பிட்டார்.

அயோப் தனது பெயரைக் குறிப்பாக சொல்லவில்லை என்றாலும், கமால் ஹிஷாம் தனது வயது மற்றும் குறிப்பிடப்பட்ட இடத்தின் அடிப்படையில் அவரைக் குறிப்பிட்டதாக நம்புகிறார்.

அந்த அறிக்கையின்படி, அந்த வழக்கறிஞர் மார்ச் 31, 2011 அன்று கைது செய்யப்பட்டார் மற்றும் பல குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றார், அதாவது நம்பிக்கை மீறல், பணமோசடி மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழான குற்றங்கள்.

கமால் ஹிஷாம் அவை அனைத்தும் அவதூறு என்று வர்ணித்தார்.

அந்தக் கூற்றின் அடிப்படையில், 2011 வரை தான் ஜொகூர் சுல்தானுக்கு வழக்கறிஞராக இருந்ததாகவும், இந்த விவகாரம் 2011, மார்ச் 23 தேதியிட்ட சுற்றறிக்கை மூலம் ஜொகூரில் உள்ள அனைத்து துறை சார்ந்த தலைவர்களுக்கும் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் கமால் கூறினார்.

சொற்களைக் குறிப்பிடுவதற்கும், எழுதுவதற்கும் வெளியிடுவதற்கும் முன்னர், அயோப் காவற்துறையின் பதிவுகளை அல்லது நீதிமன்றத்துடன் மறுபரிசீலனைச் செய்திருக்க வேண்டும் என வாதி வாதிட்டார்.

இந்த வார்த்தைகள், ஒரு வழக்கறிஞர் மற்றும் ஒரு தொழிலதிபர் என்ற வாதியின் நற்பெயரைச் சேதப்படுத்தியதாகவும், இதனால் வாதி மன உளைச்சலுக்கும் சங்கடத்திற்கும் ஆளானதாகவும் கூறப்படுகிறது.

கமால் ஹிஷாம் பொதுவான சேதங்கள், மோசமான சேதங்கள் மற்றும் / அல்லது தண்டனையை நாடுகிறார்; செலவுகள் மற்றும் நீதிமன்றம் பொருத்தமானதாகக் கருதும் உத்தரவுகள் அல்லது நிவாரணங்கள் உட்பட.