ஜூலை 1 முதல் அரசு சேவை முகப்புகள் மீண்டும் செயல்படும்

குறிப்பிட்ட சில சேவை நடைமுறைகளுடன், ஜூலை 1 முதல் அரசு சேவை முகப்புகள் மீண்டும் செயல்படத் தொடங்குமென அரசாங்கத் தலைமைச் செயலாளர் மொஹட் ஸூக்கி அலி தெரிவித்தார்.

தேசிய மீட்புத் திட்டத்தின் கீழ், நடமாட்டக் கட்டுப்பாட்டின் முதல் கட்டத்தை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, சுகாதாரச் சேவை முகப்புகள், காவல் நிலையங்கள் மற்றும் சர்வதேச நுழைவாயில்களின் சுங்கத்துறை, குடிநுழைவு துறை மற்றும் தனிமைப்படுத்துதல் மையம் தவிர, அரசு சேவை முகப்புகள் ஜூன் 1 முதல் இயற்பியல் ரீதியாக இயங்கவில்லை என்று அவர் கூறினார்.

மொஹட் ஸூக்கியின் கூற்றுப்படி, பொதுச் சேவை பின்னூட்டத்தின் அடிப்படையில், அவசரத் தேவைகளை ஆராய்ந்த பின்னர், செயல்பட்டு நடைமுறைகளுடன் நாடு முழுவதும் அரசு சேவை முகப்புகளை மீண்டும் திறக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

அரசாங்கச் சேவை முகப்புகளைத் திறப்பது, இயங்கலையில் செய்ய முடியாத சேவைகளை உள்ளடக்கியது, ஊழியர்களின் திறன் 50 விழுக்காட்டிற்கு மிகாமல், இயற்பியல் ரீதியான வருகை திட்டமிடப்பட்ட நியமனங்களுடன் நடைபெறும்.

“தேசியப் பாதுகாப்பு மன்றம் மற்றும் மலேசிய சுகாதார அமைச்சு வழங்கிய கோவிட் -19 தொற்றின் அனைத்து செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கும், எல்லா நேரங்களிலும் இணங்குவதைத் துறைத் தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

  • பெர்னாமா