“முழு நடமாட்டக் கட்டுப்பாடு” ஒரு மாதத்திற்கு நீடித்திருந்தாலும், நாட்டில் கோவிட் -19 தொற்று பரவலின் நிலை மோசமடைந்து வருவதாக பல அறிகுறிகள் காட்டுகின்றன.
ஜூன் 1 முதல் அமலில் இருக்கும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி), ஆரம்பக் கட்டத்தில் நேர்வுகள் அதிகரிப்பதைத் தடுத்தது, ஆனால் அதன் பின்னர், அது வேகத்தை இழந்தது.
உதாரணமாக, ஜூன் 5 முதல், தொற்று விகிதம் முதல் முறையாக 1.0-க்கு மேல் உயர்ந்தது.
நேற்றைய நிலவரப்படி, சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, தொற்று விகிதம் 1.04-ஆக இருந்தது.
தினசரி வழக்குகளைக் குறைக்க, இந்த விகிதம் 1.0 மட்டத்தில் இருக்க வேண்டும்.
மே மாதத்தில், இந்த எண்ணிக்கை 1.14 ஆக உயர்ந்தது.
இருப்பினும், பிகேபி 3.0 ஆணைக்குப் பிறகு, ஜூன் 1 முதல் முழு கதவடைப்பைத் (கட்டம் 1) தொடர்ந்து, அது சரிவைப் பதிவு செய்தது.
பிகேபி-க்குப் பிறகு, தொற்று வீதம் 1.07 ஆக இருந்தது, ஒரு வாரத்திற்குப் பிறகு அது 1.0 ஆகக் குறைந்தது.
இருப்பினும், அது ஜூன் நடுப்பகுதியில் குறைந்து, பின்னர் மீண்டும் உயர்ந்தது.
மற்ற குறிகாட்டிகளும் மோசமான சூழ்நிலையைக் காட்டுகின்றன.
முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு அமலாக்கத்தால், ஆரம்பத்தில் தீவிரச் சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடிந்தது. அதன் எண்ணிக்கை 900-ஆக குறைந்தது.
இருப்பினும் இந்த எண்ணிக்கை கடந்த வாரம் மீண்டும் உயர்ந்தது.